தேக்கா, கேலாங் சிராய் சந்தைகளில் கூடுதல் கண்காணிப்பு

தேக்கா, கேலாங் சிராய் சந்தைகளில் கூடுதல் கண்காணிப்பு

2 mins read
382bd51d-1422-401a-9c20-c47d38160496
-

நோன்­புப் பெரு­நாளை முன்­னிட்டு தேக்கா, கேலாங் சிராய் சந்­தை­களில் கூட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­களை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் முடுக்­கி­விட்­டுள்­ளது.

இந்த இரண்டு பிர­பல சந்­தை­

க­ளி­லும் சமூக இடை­வெளி விதி­முறை கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வதை உறுதி செய்ய அங்கு கூடு­தல் அதி­கா­ரி­கள் நிறுத்­தப்­ப­டு­வர் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் வாரி­யம் கூறி­யது.

சந்­தை­களில் குறிப்­பிட்ட இடங்­களில் கூட்­டம் அதி­க­மாக இருந்­தால் புதி­தாக வரும் வாடிக்­கை­யா­ளர்­கள் அங்கு செல்­வதை அதி­கா­ரி­கள் தடுப்­பர் என்று வாரி­யம் கூறி­யது.

பாது­காப்­பான தூர இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­பி­டிக்க வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு நினை­வூட்­டும் வகை­யில் சந்­தை­யின் தரை­யில் குறி­யீ­டு­கள் இருக்­கும்.

கடை­க­ளுக்கு வெளியே விற்­ப­னைப் பொருட்­களை வைக்க வேண்­டாம் என கடைக்­கா­ரர்­க­ளுக்கு நினை­வூட்­டப்­பட்­டுள்­ளது.

அவ்­வாறு செய்­வ­தால் சமூக இடை­வெளி விதி­மு­றை­யைக் கடைப்­பி­டிப்­பது சிர­ம­மா­கி­வி­டும் என்று வாரி­யம் தெரி­வித்­தது.

கிரு­மிப் பர­வலை முறி­ய­டிக்­கும் திட்­டம் கடந்த ஆண்டு நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­போது நுழை­வுக் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்ட நான்கு பிர­பல சந்­தை­களில் கேலாங் சிராய் சந்­தை­யும் அடங்­கும்.

தங்­கள் அடை­யாள அட்டை எண்­ணின் கடைசி எண்ணை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு

ஒற்­றைப்­படை அல்­லது இரட்­டைப்­

ப­டைத் தேதி­களில் வாடிக்­கை­

யா­ளர்­க­ளுக்குச் சந்­தைக்­குள் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தளர்த்­தப்­பட்­டது.

ஆனால் சந்­தைக்­குள் அனு

­ம­திக்­கப்­படும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான அதி­க­பட்ச வரம்பு தொடர்ந்து நடப்­பில் உள்­ளது.

கேலாங் சிராய் சந்­தை­யில் ஒரே நேரத்­தில் அதி­க­பட்­சம் 300 வாடிக்­கை­யா­ளர்­கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­வர். தேக்கா சந்­தை­யில் அதி­க­பட்­சம் 200 வாடிக்­கை­யா­ளர்­கள் அனுமதிப்­ப­டு­வர்.

"இந்­தப் பிர­ப­ல­மான சந்­தை­

க­ளுக்­குள் செல்­வ­தற்­குக் சிறிது நேரம் காத்­தி­ருக்க வேண்­டும் என்­பதை வாடிக்­கை­யா­ளர்­கள் எதிர்­பார்க்க வேண்­டும்," என்று வாரி­யத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் கூறி­னார்.

தோரா­ய­மான காத்­தி­ருப்பு நேரத்­தைக் குறிக்­கும் பல­கை­கள் சந்­தை­யின் நுழை­வா­யி­லில் வைக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.