சமூகத்தில் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொவிட்-19 தொற்று

சமூகத்தில் ஒருவர் உட்பட 12 பேருக்கு கொவிட்-19 தொற்று

2 mins read
4d98d172-deb3-4b03-bcec-b95340adc5a9
-

சமூக அள­வில் ஒரு­வர் உட்­பட சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 12 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டது.

எஞ்­சிய 11 பேரும் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வந்­த­வர்­கள். இங்கு வந்­த­தும் அவர்­க­ளுக்கு வீட்­டில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி­களில் புதி­தாக யாரும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

திங்­கட்­கி­ழ­மை­யன்று 45 பேருக்­குக் கிருமி பாதிப்பு உறு­தி­செய்­யப்­பட்­டது. 'வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ்' தங்­கு­வி­டு­தி­யைச் சேர்ந்த பங்­ளா­தேஷ் ஊழி­யர் ஒரு­வ­ரும் அதில் அடங்­கு­வார்.

ஏற்­கெ­னவே, இதே தங்­கு­வி­டு­தி­யைச் சேர்ந்த இரு­வ­ருக்கு கொவிட்-19 தொற்று உறுதி­ செய்­யப்­பட்­டது.

அவ்­வி­ரு­வ­ரில் ஒரு­வர் பங்­ளா­தே­ஷைச் சேர்ந்­த­வர். மற்­றொ­ரு­வர் அந்த பங்­ளா­தேஷ் ஊழி­ய­ரு­டன் ஒரே அறை­யில் தங்கி இருந்­த­வர்.

இந்­நி­லை­யில், திங்­கட்­கி­ழமை உறு­தி­செய்­யப்­பட்ட 35 வயது பங்­ளா­தேஷ் ஊழி­யர், தங்­கு­வி­டு­தி­யில் அமைந்­துள்ள வேறு கட்­ட­டத்­தில் வசித்­த­வர் என்­றும் ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட இரு­வ­ரு­டன் அவர் தொடர்­பில் இல்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மேலும், 'ஜென்டா டெக­ரே­ஷன் கான்ட்­ராக்­டர்' நிறு­வ­னத்­தைச் சேர்ந்த அந்த கட்­டு­மான ஊழி­யர், வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் தொடர்­பில் இல்லை என்று அமைச்சு தெரி­வித்­தது.

கட்­டாய தனிமை உத்­த­ர­வின் போது வேலை அனு­ம­திச் சீட்டு வைத்­தி­ருக்­கும் அந்த ஊழி­ய­ருக்­குக் கிருமி பாதிப்பு இல்லை என்று சோத­னை­யில் கண்­ட­றி­யப்­பட்­டது.

இறுதி சோதனை ஏப்­ரல் 20ஆம் தேதி­யன்று செய்­யப்­பட்­டது.

பின்­னர், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக ஏப்­ரல் 22ஆம் தேதி­யன்று அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

நோய்க்­கான அறி­கு­றி­கள் அவ­ரி­டம் காணப்­ப­டா­த­போ­தும், மறு­நாள் செய்­யப்­பட்ட கொவிட்-19 சோத­னை­யில் கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

தேசிய பொதுச் சுகா­தார ஆய்­வுக்­கூ­டத்­திற்கு வந்த மற்­றொரு சோதனை முடி­வில், அவ­ருக்­குக் கிருமி பாதிப்பு இல்லை என்று கூறப்­பட்­டது.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி 17ஆம் தேதிக்­கும் டிசம்­பர் 21ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் பங்­ளா­தே­ஷுக்கு அவர் சென்­றி­ருந்­த­தால், அவர் உட­லில் இன்­ன­மும் பழைய தொற்று இருக்­கக்­கூ­டும் என்­றும் அது பர­வும் ஆற்­றலை இழந்­து­விட்ட நிலை­யில் உள்­ளது என்­றும் சுகா­தார அமைச்சு கூறி­யது.

பிரிட்­ட­னில் படித்து வரும் 19 வயது சிங்­கப்­பூ­ர­ரும் திங்­கட்­கி­ழமை அறிவிக்கப்பட்டவர்களில் சம்­ப­வங்­களில் ஒரு­வர். சென்ற ஆண்டு செப்­டம்­பர் 11 முதல் டிசம்­பர் 1 வரை பிரிட்­ட­னில் இருந்த அவர், செப்­டம்­ப­ரில் தமக்கு சுவா­சப் பிரச்­சினை ஏற்­பட்­டது என்­றும் கொவிட்-19 பரி­சோ­த­னையை அவர் செய்­து­கொள்­ள­வில்லை என்­றும் கூறி­னார்.

மீண்­டும் பிரிட்­ட­னுக்­குச் செல்­வ­தற்­காக அவர் சென்ற வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று கொவிட்-19 பரி­சோ­தனை செய்­த­போது, அவ­ருக்­குத் தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.