இந்தியாவை அச்சுறுத்தும் தொற்று: அன்புக்குரியவர்களை நினைத்து வாடும் சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள்

இந்தியாவை அச்சுறுத்தும் தொற்று: அன்புக்குரியவர்களை நினைத்து வாடும் சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள்

2 mins read
e14b0243-9529-477a-ab4f-72ad891c3688
-

சீனா­வின் வூஹான் மாநி­லத்­தில் உரு­வா­ன­தா­கக் கூறப்­படும் கொவிட்-19 தொற்று இந்­தி­யாவை அச்­சு­றுத்தி வரும் இவ்­வே­ளை­யில், சிங்­கப்­பூ­ரில் வாழும் இந்­தி­யர்­கள், இந்­தி­யா­வில் வாழும் தங்­கள் உற்­றார் உற­வி­னரை எண்ணி கலக்­கத்­தில் உள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரின் கெம்­பங்­கா­னில் வசித்து வரும் இந்­தி­யா­வைச் சேர்ந்த செல்வி ஷுபாதா மிஷ்ரா, நிதித்­துறை தொழில்­நுட்ப ஆலோ­ச­க­ரா­கப் பணி­பு­ரிந்து வரு­கி­றார். இவர் அதி­காலை உறக்­கத்­தில் இருந்து கண்­வி­ழித்­த­துமே, முதல் வேலை­யாக ஹைத­ரா­பாத் நக­ரில் வாழும் தன் வருங்­கா­லக் கண­வர் திரு ஸக்­வான் கானின் உடல்­நிலை எப்­படி இருக்­கிறது என்று கைத்­தொ­லை­பேசி வழி­யா­கத் தெரிந்­து­கொள்­வ­து­தான் என்­கி­றார்.

தெலுங்­கானா மாநி­லத்­தைச் சேர்ந்த திரு கான், ஒரு நீரி­ழிவு நோயாளி, அவர் வசிக்­கும் அடுக்கு­மா­டிக் குடி­யி­ருப்­பில் பக்­கத்து வீட்­டில் வசிக்­கும் அவ­ரது நண்­பர் தொற்­றுப் பாதிப்­புக்­குள்­ளாகி இப்­போது வீட்­டில் குண­ம­டைந்து வரு­கி­றார்.

ஏனெ­னில், பெருகி வரும் கொவிட்-19 நோயா­ளி­க­ளால் மருத்­து­வ­ம­னை­கள் நிரம்பி வழி­கின்­ற­னர். புதிய நோயா­ளி­கள் படுக்கை வச­தி­யின்றி திருப்பி அனுப்­பப்­பட்டு வரு­கின்­ற­னர். இது பெரும் அச்­சத்­தைத் தந்­துள்­ள­தாக தனது வேத­னை­யைப் பகிர்ந்­து­கொண்­டுள்­ளார் செல்வி ஷுபாதா மிஷ்ரா.

பேர­ழி­வைத் தரும் வகை­யில் கொவிட்-19 தொற்று இந்­தி­யா­வுக்கு பெரிய அச்­சு­றுத்­த­லாக உரு­வெ­டுத்­துள்­ளது. இந்­நி­லை­யில் செல்வி மிஸ்­ரா­வைப் போல சிங்­கப்­பூ­ரில் இந்­தி­யர்­கள் பலர், இந்­தி­யா­வில் வாழும் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை எண்ணி கடந்த சில நாட்­க­ளா­கக் கலக்­கத்­தில் இருந்து வரு­கின்­ற­னர்.

செல்வி மிஸ்­ரா­வின் வருங்­கா­ல கண­வர் திரு கானின் குடும்ப உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஆனால், திரு கான் நீரி­ழிவு நோயா­லும் அவ­திப்­பட்டு வரு­கி­றார். அவரை அவ்­வப்­போது கவ­னித்­துக்­கொள்­ளும் நண்­ப­ரும் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்.

தொற்றுக்கு ஆளான பக்­கத்து வீட்­டுக்­கா­ர­ரால் திரு கானுக்­கும் தொற்­றுப் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­சம் நாள்­தோ­றும் தன்னை வாட்­டு­வ­தா­க­வும் மனஇறுக்­கத்­திற்கு ஆளாக்­கு­வ­தா­க­வும் கூறு­கி­றார் செல்வி மிஸ்ரா.

குமாரி பார்­கவா, "இந்­தக் கொரோனா எங்­களை துய­ரப் படு­கு­ழி­யில் தள்­ளி­விட்­டது. எங்கோ வாழும் எங்­கள் குடும்­பத்­தி­னரை நினைத்து வாடும்­போது மர­ணம், துன்­பம் என திகில் கதை­க­ளைப் படிப்­ப­தைப் போன்று உணர்­கி­றேன். தினமும் அச்­சத்­தால் என் ஆன்­மா­வின் ஒரு பகுதி உயி­ரி­ழந்து வரு­வ­தைப்­போல் உணர்­கி­றேன் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்கு அளித்த பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

இந்­தி­யா­வின் 1.3 பில்­லி­யன் மக்­கள் தொகை­யில் இது­வரை 17.31 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.