தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பிஎஸ்எல்இ மதிப்பீட்டு முறை குறித்து கல்வி அமைச்சு உயர்நிலைப் பள்ளி செல்ல குறைந்தபட்ச புள்ளிகள் அறிவிப்பு

2 mins read
2f2a1791-d4e6-4ec4-9329-43377bf26207
சிங்குவா தொடக்கப்பள்ளி மாணவர் விஷ்ணு, தனது பிஎஸ்எல்இமுடிவுகளை ஆசிரியருடன் பார்க்கிறார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

'பிஎஸ்­எல்இ' எனப்­படும் தொடக்­கப்­பள்ளி இறு­தித் தேர்­வுக்­கான புதிய மதிப்­பீட்டு முறை இவ்­வாண்டு முதல் நடப்­புக்கு வரு­கிறது. இதன்­படி, தொடக்­க­நிலை ஆறில் பயி­லும் மாண­வர்­கள் உயர்­நி­லைப் பள்ளி செல்­வ­தற்­குத் தேவை­யான குறைந்­த­பட்ச புள்ளி­க­ளைக் கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

புதிய பிஎஸ்­எல்இ மதிப்­பீட்டு முறைப்­படி தலை­சி­றந்த உயர்­நிலைப் பள்­ளி­க­ளுக்­குச் செல்ல விரும்­பும் தொடக்­க­நிலை ஆறு மாண­வர்­கள், இனி முழு மதிப்­பெண்­கள் பெறத் தேவை­யில்லை.

கல்வி அமைச்சு நேற்று 139 உயர்­நி­லைப் பள்­ளி­க­ளுக்­கான குறைந்­த­பட்ச புள்­ளி­களை வெளி­யிட்­டது. 2016ஆம் ஆண்டு முதன்­மு­த­லில் அறி­விக்­கப்­பட்ட இப்­பு­திய மதிப்­பீட்டு முறை­யின் கீழ், ஒவ்­வொரு பிஎஸ்­எல்இ பாடத்­திற்­கும் 'அடை­வு­நி­லை­கள்' எனப்­படும் எட்­டுத் தர­நி­லை­கள் கொண்ட மதிப்­பெண் தரம் அள­வு­முறை அறி­முகம் காண்­கிறது.

'A*' முதல் 'E' வழங்­கப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக ஒவ்­வொரு பாடத்­திற்­கும் 'AL1' முதல் 'AL8' வரை­யி­லான அடை­வு­நி­லை­கள் வழங்­கப்­படும்.

நான்கு பாடங்­க­ளின் அடை­வு­நி­லை­க­ளின் மொத்­தம், ஒரு மாண­வரின் ஒட்­டு­மொத்த பிஎஸ்­எல்இ மதிப்­பெண்­ணா­கக் கரு­தப்­படும். இதில் ஆகச் சிறந்த மதிப்­பெண் நான்கு ஆகும்.

ராஃபிள்ஸ் கல்­விக் கழ­கம், ராஃபிள்ஸ் பெண்­கள் பள்ளி போன்ற பள்­ளி­க­ளின் குறைந்­த­பட்ச புள்­ளி­கள், 4 முதல் 6 எனக் கல்வி அமைச்­சின் நேற்­றைய அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆண்­டர்­சன் உயர்­நி­லைப் பள்ளி, கிரெ­செண்ட் பெண்­கள் பள்ளி போன்ற பிர­ப­ல­மான பள்­ளி­க­ளுக்­கான குறைந்­த­பட்ச புள்­ளி­களும் 4 முதல் 10, 6 முதல் 11 என்று முறையே இருந்­தன.

'டி-ஸ்கோர்' என்ற பழைய பிஎஸ்­எல்இ மதிப்­பீட்டு முறை­யைக் காட்டி­லும் இப்­பு­திய 'AL' முறை, மாண­வர்­க­ளுக்கு மன­அ­ழுத்­தம் அதி­கம் கொடுக்­காத வண்­ணம் அமைந்­திடும் என்று கூறப்­ப­டு­கிறது.

சென்ற ஆண்டு மாண­வர்­க­ளது பிஎஸ்­எல்இ முடி­வு­களை அடிப்­படை­யா­கக் கொண்டு உயர்­நி­லைப் பள்ளி­க­ளுக்­கான குறைந்­த­பட்ச புள்­ளி­களை நிர்­ண­யித்­த­தாக கல்வி அமைச்சு நேற்று இணை­யத்­தில் நடை­பெற்ற கூட்­டத்­தில் தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில் 'டி-ஸ்கோர்' முறை போலவே, ஆண்­டுக்கு ஆண்டு மதிப்­பெண் வரம்­பு­கள் மாறும். ஏனெ­னில் முந்­தைய ஆண்­டின் பிஎஸ்­எல்இ மாண­வர்­க­ளது தேர்வு முடி­வைக் கொண்டே அடுத்த ஆண்­டின் மதிப்­பெண் வரம்­பு­கள் உறுதி­செய்­யப்­படும்.

ஒரே மதிப்­பெண் பெற்­றுள்ள இரண்டு மாண­வர்­கள், உயர்­நி­லைப் பள்­ளி­யில் எஞ்­சிய ஒரே இடத்­தைப் பிடிக்க, ஒரு சில அம்­சங்­கள் கருத்­தில் கொள்­ளப்­படும். மாண­வ­ரின் குடி­யு­ரிமை, மாண­வ­ரின் உயர்­நிலைப் பள்ளி விருப்­பத் தெரி­வுப் பட்­டி­யல் போன்­ற­வற்­றைக் கொண்­டும் முடி­வெ­டுக்க முடி­யாத நிலை­யில், மின்-குலுக்­கல் முறை பயன்­படுத்­தப்­படும் என்று கூறப்­பட்­டது.

ஆத­லால், விருப்­ப­மான ஆறு உயர்­நி­லைப்­பள்­ளி­க­ளைக் கவ­ன­மாக தேர்­வு­செய்­யு­மாறு அமைச்சு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.