புதிய ‘பிஎஸ்எல்இ’ மதிப்பீட்டு முறை: கருத்தில் கொள்ள வேண்டியவை

புதிய பிஎஸ்­எல்இ மதிப்­பீட்டு முறை, உயர்­நி­லைப் பள்­ளி­க­ளுக்­கான குறைந்­த­பட்ச புள்­ளி­கள் ஆகி­யவை தொடர்­பில் எழக்­கூடிய சில கேள்­வி­கள் குறித்து கல்வி அமைச்சு விளக்­கம் அளித்­து உள்­ளது.

இதன்­படி, சென்ற ஆண்டு பிஎஸ்­எல்இ எழு­திய தொடக்­க­நிலை ஆறு மாண­வர்­க­ளின் முடிவு­கள், பள்­ளித் தெரி­வு­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்டு அந்­தந்­தப் பள்­ளி­க­ளுக்­கான மதிப்­பெண் வரம்­பு­கள் நிர்­ண­யிக்­கப்­படும்.

மாண­வர்­கள் தொடர்ந்து கல்­வித் தகுதி அடிப்­ப­டை­யில் உயர்­நி­லைப் பள்­ளிக்­குத் தகு­தி­பெ­று­வர். ஆனால் அதே பிஎஸ்­எல்இ மதிப்­பெண் பெறும் இரு­வர், ஓர் இடத்­திற்­குப் போட்­டி­யி­டு­வ­தாக இருந்­தால், சிங்­கப்­பூர் குடி­யு­ரிமை பெற்ற மாண­வ­ருக்கே முன்­னுரிமை வழங்­கப்­படும்.

இரு­வ­ருக்­கும் ஒரே குடி­யு­ரி­மைத் தகுதி இருந்­தால், அவர்­களின் உயர்­நி­லைப் பள்ளி தெரிவு­க­ளின் வரி­சைப்­படி அக்­கு­றிப்­பிட்ட பள்ளி இடம்­பெ­றும் இட­மும் கருத்­தில் கொள்­ளப்­படும்.

பட்­டி­ய­லி­லும் ஒரே இடத்­தில் அப்­பள்­ளி­யின் பெயர் இருந்­தால், மின்-குலுக்­கல் முறை வழி மாண­வர் பெயர் தேர்ந்­தெ­டுக்­கப்­படும்.

இதற்­கி­டையே, குறைந்­த­பட்ச புள்­ளி­க­ளின் வரம்­புக்­குள் மாண­வரின் மதிப்­பெண் புள்­ளி­கள் இருந்­தால், அவ­ருக்கு நிச்­ச­யம் பள்­ளி­யில் இட­முண்டு என்று ஆகி­வி­டாது என்­றும் அமைச்சு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!