ஹாங்காங் பயணச்சீட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்தன

ஹாங்காங் பயணச்சீட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்தன

2 mins read
0bae09f9-49cf-4a4e-ad43-5f116cd3f253
-

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்­கப்­பூர்-ஹாங்­காங் இரு­வழி பயண ஏற்­பாடு அடுத்த மாதம் 26ஆம் தேதி தொடங்­கு­வதை முன்­னிட்டு அதற்­கான பய­ணச் சீட்­டு­கள் வேக­மாக விற்­றுத் தீர்ந்­து­விட்­ட­ன.

இரு நக­ரங்­க­ளுக்­கும் இடை­யி­லான பய­ணம் நீண்ட தாம­தத்­திற்­குப் பிறகு ஒரு­வ­ழி­யாக மே 26ஆம் தேதி தொடங்­கும் என்­றும் தனி­மைப்­ப­டுத்­தல் நடை­மு­றை­யற்ற பயண ஏற்­பாடு இது என்­றும் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அறி­விப்பு வெளி­யா­ன­துமே பய­ணி­கள் உட­ன­டி­யாக விமா­னப் பய­ணச் சீட்­டு­களை வாங்­கத் தொடங்­கி­விட்­ட­னர்.

அதன் கார­ண­மாக மே 26 முதல் ஜூன் 4 வரை­யி­லான ஹாங்­காங் ஒரு­வழி பய­ணச்­சீட்­டு­கள் அனைத்­தும் நேற்று நண்­ப­கல் வாக்­கில் தீர்ந்­து­விட்­ட­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், கேத்தே பசி­பிக் ஏர்­வேஸ் ஆகிய இரு விமான நிறு­வ­னங்­களும் அறி­வித்­தன.

அதே நேரம் ஜூன் 7 முதல் மேற்­கொள்­ளப்­படும் பய­ணத்­திற்­கான கட்­ட­ணம் $586லிருந்து தொடங்­கும் என்று சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் தெரி­வித்து உள்­ளது.

இந்­நி­லை­யில், ஜூன் 5ஆம் ேததி முதல் ஹாங்­காங் செல்­வ­தற்­கான பய­ணச்­சீட்­டு­கள் கிடைக்­கும் என்று அறி­வித்­துள்ள கேத்தே பசி­பிக், அதற்­கான கட்­ட­ணம் $636 முதல் தொடங்­கும் என்று குறிப்­பிட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் இருந்து ஹாங்­காங் செல்­வ­தற்­கான பய­ணத் தேவை அதி­க­மாக இருப்­ப­து­போல ஹாங்­காங்­கி­லி­ருந்து சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கான தேவை­யும் அதி­க­ரித்து உள்­ளது.

மே 26 முதல் ஜூன் 3 வரை அங்­கி­ருந்து சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கான ஒரு­வழி பய­ணச்­சீட்­டு­கள் அனைத்­தும் விற்­றுத் தீர்ந்துவிட்­ட­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் அறி­வித்­து உள்­ளது.

அதே­நே­ரம் ஜூன் 4ஆம் தேதி முதல் பய­ணக்­கட்­ட­ணம் $995 என்பதில் இருந்து தொடங்­கும் என்­றும் அந்­நி­று­வ­னம் அறி­வித்­துள்­ளது.

ஹாங்­காங்-சிங்­கப்­பூர் ஒரு­வ­ழிப் பய­ணத்­திற்­கான கேத்தே பசி­பிக் விமா­னப் பய­ணத்­தின் அடுத்­த­கட்­டம் ஜூன் 1 தொடங்­கும்­போது அதன் விலை $706லிருந்து தொடங்­கும் என்று அது கூறி­யுள்­ளது.

இரு­வழி பயண ஏற்­பாட்டு முறை­யின் கீழான தங்­கள் நிறு­வ­னத்­தின் விமா­னப் பய­ணத்­திற்கு வலு­வான தேவை இருப்­ப­தாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் பேச்­சா­ளர் ஒருவர் கூறி­னார்.

இருப்­பி­னும், வர்த்­தக ரக­சி­யத்­தன்மை கருதி இதுவரை எத்­தனை பய­ணி­கள் பய­ணச்­சீட்­டு­க­ளைப் பதிவு செய்­துள்­ளார்­கள் என்ற விவ­ரத்தை வெளி­யிட அவர் மறுத்­தார்.

சிங்கப்பூர்-ஹாங்காங் இடை­யி­லான இருவழி விமா­னப் பய­ணத்தை கடந்த ஆண்டு நவம்­பர் 22ஆம் ேததி தொடங்­கத் திட்­ட­

மி­டப்­பட்டு இருந்­தது.

ஆனால், அப்போது ஹாங்­காங்­கில் கொவிட்-19 சம்­ப­வங்­கள் அதி­க­மா­கப் பதி­வா­கி வந்ததால் அந்த ஏற்­பாடு தள்­ளி­வைக்­கப்­பட்­டது.

இப்­போ­தைக்கு நாள் ஒன்­றுக்கு சிங்­கப்­பூ­ரில் இருந்­தும் ஹாங்­காங்­கில் இருந்­தும் தலா ஒரு விமா­னம் இயக்­கப்­படும் என்­றும் ஒவ்­வொரு விமா­னத்­தி­லும் பய­ணம் செய்­யக் கூடி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை 200க்குள் இருக்­கும் என்­றும் சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்து அமைச்சு நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது.

இரு வாரங்­க­ளுக்கு இதே நிலைமை நீடிக்­கும் என்­றும் ஜூன் 10ஆம் தேதிக்­குப் பிறகு வாரத்­திற்கு இரு விமா­னங்­கள் இயக்க ஏற்­பாடு செய்­யப்­படும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

மே 26ல் தொடங்கும் இருவழி பயணத்திற்கான தேவை அதிகரிப்பு