$69 மில்லியன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையை இடைமறித்த அதிகாரிகள்

2 mins read
18c8ef86-7ff7-4be4-a925-0ab4d35c0a72
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள சந்­தே­கத்­திற்கு இட­மான வங்­கிக் கணக்­கு­கள் வழி­யாக நடை­பெற்ற பண மாற்ற நட­வ­டிக்­கையை அதி­கா­ரி­கள் இடை­ம­றித்து தடுத்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

2019ஆம் ஆண்டு முதல் அவ்­வாறு இடை­ம­றிக்­கப்­பட்ட பண­மாற்­றத்­தின் அளவு $69 மில்­லி­யன் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் 'கொள்கை, பணம் செலுத்­து­தல் மற்­றும் நிதிக் குற்­றம்' பிரிவு துணை நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி லூ சியூ யீ கூறி­னார்.

கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­று­வ­தற்கு எதி­ரான சிறப்பு நிபு­ணர்­க­ளின் சங்­கம் ஏற்­பாடு செய்த மாநாடு ஒன்­றில் பங்­கேற்­றுப் பேசி­ய­போது அவர் இந்த விவ­ரத்தை வெளி­யிட்­டார்.

இந்த சட்­ட­வி­ரோத பணப் பரி­மாற்ற நட­வ­டிக்­கையை வர்த்­தக விவ­கா­ரத் துறை, சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் ஆகி­ய­வற்­று­டன் இங்­குள்ள முக்­கிய வங்­கி­களும் இணைந்த கூட்டு முயற்­சி­யால் இடை­ம­றிக்க உத­வி­ய­தாக அவர் கூறி­னார்.

கள்­ளப் பணத்தை நல்ல பண­மாக மாற்­று­வ­தற்கு எதி­ரா­க­வும் பயங்­க­ர­வாத நிதி­ய­ளிப்பை முறி­ய­டிக்­க­வும் ஏசி­ஐபி என்­னும் தொழில்­துறை பங்­கா­ளித்­துவம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

இதன் வழி­யாக சில குறிப்­பிட்ட சம்­ப­வங்­களில் துப்பு துலக்­க­வும் மேற்­கொண்டு பகுப்­பாய்வு நடத்­த­வும் 2019ஆம் ஆண்டு முதல் சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக விவ­கா­ரத் துறை­யும் முக்­கிய வங்­கி­க­ளோடு இணைந்து பணி­யாற்­றி­ய­தாக திரு­வாட்டி லூ தெரி­வித்­தார்.

மேலும் இத்­த­கைய அணுக்­க­மான கூட்டு ஒத்­து­ழைப்பு, பகுப்­பாய்­வுத் தர­வு­க­ளின் ஆற்­றல்­மிக்க பயன்­பாடு ஆகி­யன நிதிக் குற்­றங்­களை வெளிச்­சத்­திற்­குக் கொண்டு வரும் முயற்­சி­களில் வெற்­றியை ஈட்­டித் தந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

$69 மில்­லி­யன் சட்­ட­வி­ரோ­தப் பண­மாற்ற நட­வ­டிக்­கை­யில் ஊடு­ரு­வி­ய­தன் மூலம் இங்கு அனுப்பி ­வைக்­கப்­பட்ட $19 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட பண­மாற்ற நட­வ­டிக்கை தடுத்து நிறுத்­தப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்ட திரு­வாட்டி லூ, சந்­தே­கத்­திற்கு இட­மான கணக்­கு­களை அடை­யா­ளம் காண்­ப­தில் வங்­கி­கள் துடிப்­பு­டன் செயல்­பட்­ட­தன் கார­ண­மாக இது சாத்­தி­ய­மா­ன­தா­கத் தெரி­வித்­தார்.