தமது முன்னாள் பணிப்பெண்ணைக் காயப்படுத்தியதாக 42 வயதுப் பெண் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட உள்ளது. அந்த 49 வயது இந்தோனீசிய பணிப்பெண்ணை அவர் துன்புறுத்தியதாக கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி போலி சிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் கிடைக்கப்பெற்றபோது பணிப்பெண் இந்தோனீசியா திரும்பி விட்டதாகவும் புலன் விசாரணைக்கு உதவ அவர் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்பட்டதாகவும் போலிசார் நேற்று கூறினர்.
2020 பிப்ரவரி முதல் அக்டோபர் வரை பல சந்தர்ப்பங்களில் பணிப்பெண்ணை அவரது முதலாளி தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்தது. குறிப்பாக, சூடான இஸ்திரிப் பெட்டியை பணிப்பெண்ணின் வலது கையில் மீண்டும் மீண்டும் வைத்து அவர் அழுத்தியிருக்கிறார். அத்துடன் தமது கைமுட்டி
களாலும் துணிதொங்கி போன்ற பொருட்களாலும் அவரது கண்களில் அந்த முதலாளி தாக்கியதாகவும் தெரிய வந்தது.
வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக இரு குற்றச்சாட்டுகளும் ஆபத்தை விளை விக்கக்கூடிய வகையில் வேண்டுமென்றே காயம் ஏற்
படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டும் கொடுங்காயத்தை வேண்டுமென்றே ஏற்படுத்திய ஒரு குற்றச்சாட்டும் அந்த முதலாளிப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட உள்ளது.

