பொருளியல் தடை விதிக்கப்பட்ட வடகொரியா வுடன் வர்த்தகம் புரிந்ததாக வும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றத்திற் காகவும் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் அமெரிக்க புலன் விசாரணைப் பிரிவு அதிகாரி களால் தேடப்படுகிறார். குவெக் கீ செங், 61, எனப் படும் அவர், இங்குள்ள கப்பல் துறை நிறுவனம் ஒன்றின் இயக்குநராக உள்ளார். வட கொரியாவுக்கு US$1.5 மில்லி யன் (S$2 மில்லியன்) மதிப்பு உள்ள எரிபொருள் எண்ெணய் அனுப்பியதாகக் கூறப்பட்டது. இதன் மூலம் பொருளியல் தடை தொடர்பான விதிகளை மீறியதற்காகவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தில் ஈடு பட்டதற்காக வும் குவெக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நீதித் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் தேடப்படும் சிங்கப்பூரர்
1 mins read
-

