செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b76e3eb8-675c-43e0-b8d1-dbbc9102ad09
-

யூடியூப்பில் வெளியிடப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணை

யூடி­யூப் தளம் ஒன்­றில் வெளி­யான இன­வா­தம் மற்­றும் துன்­பு­றுத்­தல் சம்­ப­வங்­கள் தொடர்­பாக போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். இம்­மா­தம் 21ஆம் தேதி கிழக்கு -மேற்கு எம்­ஆர்டி வழித்­தட ரயில் ஒன்­றில் இருந்த பெண் ஒரு­வர், பய­ணி­களை காணொளி படம் எடுத்து அவர்­க­ளின் இனம் பற்றி கேட்­டது டுவிட்­ட­ரில் காணொ­ளி­யாக வெளி­யாகி உள்­ளது. பய­ணி­க­ளால் தாம் துன்­பு­றுத்­தப்­பட்­ட­தா­க­த் தெரிவித்த அப்பெண் அப்போது ரயி­லில் இருக்­கும் மலாய்க்­கா­ரர்­களை கணக்­கெ­டுத்ததாக காணொ­ளி­யில் பதி­வாகி உள்­ளது. இச்­சம்­ப­வம் தொடர்­பில் போலி­சுக்­குப் புகார்­கள் வந்­த­தா­க­வும் 57 வய­துப் பெண் புலன் விசா­ர­ணைக்கு உதவி வரு­வ­தா­க­வும் போலிஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

சம்­பந்­தப்­பட்ட பெண்­ணின் மன­நிலை சோதிக்­கப்­பட்டு

வரு­வ­தாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறி­கிறது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

வாக­னங்­க­ளுக்­கான பதிவு அங்­கீ­கா­ரக் குறி­யீ­டு­களை

வழங்­கு­வது தொடர்­பாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்தை ஏமாற்­றி­ய­தாக இரு ஆட­வர்­கள் மீது குற்­றம் சுமத்­தப்­பட்டுள்­ளது. லோ இ யோக் லம், 66, சுவா செங் காங், 64, ஆகிய அவ்­வி­ரு­வ­ரும் ஆணை­யத்தை ஏமாற்ற 2010 அக்­டோ­பர் முதல் 2012 ஏப்­ரல் வரை 21 சந்­தர்ப்­பங்­களில் கூட்­டுச்­சதி செய்­த­தா­கக் குற்­றச்­சாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டது. குற்­றம் நிகழ்ந்த வேளை­யில் சின் டிரான்ஸ் இன்­ஜி­னி­ய­ரிங் என்­னும் வாக­னத் தயா­ரிப்பு நிறு­வ­னத்­தில் ஓட்­டு­ந­ராக இவ்­விரு ஆட­வர்­களும் வேலை செய்­த­னர். இவ்­விரு ஆட­வர்­க­ளின் செயல்­க­ளால் சின் டிரான்ஸ் நிறு­வ­னத்­தின் பல்­வேறு வாக­னங்­க­ளின் எடை விவ­ரத்தை ஆணை­யத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஜேஐசி வாக­னச் சோதனை சேவை­கள் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த சோதனை அதி­கா­ரி­கள் பொய்­யாக சமர்ப்­பிக்­கும் நிலை ஏற்­பட்­டது. அதன் மூலம் அந்த வாக­னங்­கள் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தொழில்­நுட்ப விதி­க­ளுக்கு உட்­பட்­டி­ருப்­ப­தைப் போல நம்ப வைத்து ஆணை­யம் ஏமாற்­றப்­பட்­ட­தாக லஞ்ச ஊழல் புலன்­வி­சா­ர­ணைப் பிரிவு நேற்று முன்­தி­னம் ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­தது. அத­னைத் தொடர்ந்து, டிரை­லர்ஸ் எனப்­படும் வாக­னத் தொடர் ஊர்­தி­க­ளுக்கு பதி­வுக் குறி­யீ­டு­கள் வழங்­கப்­பட்­டன. பின்­னர் மோசடி தெரி­ய­வந்­தது. ஆட­வர் இரு­வ­ரும் 21 குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். சம்­பந்­தப்­பட்ட இரு வாக­னச் சோதனை அதி­கா­ரி­கள் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டதா என்­பது பற்றி நீதி­மன்ற ஆவ­ணங்­களில் எது­வும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. சுவா­வும் லோவும் முறையே மே 18 மற்­றும் ஜூன் 8ஆம் தேதி­களில் விசா­ர­ணைக்­காக மீண்­டும் நீதி­மன்­றம் வர உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது. ஒவ்­வொரு மோச­டிக் குற்­றத்­திற்­கும் மூன்­றாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

குற்றத்தை ஒப்புக்கொள்ள நடிகர் டெரன்ஸ் காவ் இணக்கம்

சிங்­கப்­பூ­ரின் முன்­னணி நடி­கர் டெரன்ஸ் காவ், 53, பாது­காப்பு இடை­வெளி விதி­களை மீறிய குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள இணங்கி இருப்­ப­தாக அவ­ரது வழக்­க­றி­ஞர் நேற்று தெரி­வித்­தார். கடந்த ஆண்டு நடை­பெற்ற மீடி­யா­கார்ப் கலை­ஞர் ஜெஃப்ரி ஸுவின் பிறந்­த­நாள் விழா கொண்­டாட்­டத்­தின்­போது விதிமீறல் ­சம்­ப­வம் நிகழ்ந்­தது. விழா­வின் மற்­றொரு விருந்­தி­னர் லான்ஸ் லிம் சீ கியோங், 50, என்­ப­வ­ரும் தம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொள்ள இணக்­கம் தெரி­வித்­த­தாக கோரி வோங் என்­னும் வழக்­க­றி­ஞர் கூறி­யுள்ளார்.

ஐந்து பேருக்கு மேல் ஒன்­று­கூ­டக் கூடாது என்­னும் விதி நடப்­பில் இருந்­த­போது அதனை மீறி­ய­தாக காவ், லிம் ஆகிய இரு­வர் மீதும் கொவிட்-19 (தற்­காலிக நட­வ­டிக்­கை­கள்) சட்­டத்­தின்­கீழ் குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கு­கின்­ற­னர். பிராடல் ரோடு அருகே டெய்ஸி ரோட்டில் அமைந்துள்ள தமது கொண்டோமினிய வீட்டில் அக்டோபர் 2ஆம் தேதி இரவு முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை நடைபெற்ற கொண்டாட்டத்தில் 12 பேர் வரை பங்கேற்க அனுமதித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல முறையான காரணமின்றி கொண்டாட்ட பங்கேற்பாளர்களைச் சந்திக்க தமது வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்தை லிம் எதிர்நோக்குகிறார்.