கொவிட்-19: புதிதாக 23 பேர் பாதிப்பு

கொவிட்-19: புதிதாக 23 பேர் பாதிப்பு

1 mins read
f6f0f04f-0abe-4d3d-8414-b96126e8eeae
-

சிங்கப்பூரில் புதிதாக 23 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் மொத்த எண்ணிக்கை 61,086க்கு உயர்ந்துள்ளது. இவர்களில் மூவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய சம்பவங்கள் இன்று பதிவாகவில்லை என்றது அமைச்சு. எஞ்சிய 20 பேர் சிங்கப்பூருக்கு வெளியே கிருமி தொற்றி இங்கு வந்தவர்கள். இவர்கள் சிங்கப்பூரை அடைந்ததும் வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

மேல் விவரங்கள் புதன்கிழமை இரவு அறிவிக்கப்படும்.