மத்திய சேம நிதிச் சேவைகளை மேம்படுத்துவதற்கான கருத்து தெரிவிப்பு போன்ற அம்சங்கள் குறித்துத் தங்களின் நண்பர்களுடன் தகவல் பகிர்ந்துகொள்ளும் புதிய திட்டத்தின்கீழ் 800க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் இணைந்துள்ளனர்.
மத்திய சேம நிதிக் கழகத்தின் புதிய 'கம்யூனிட்டி பேயிங் இட் ஃபார்வர்ட்' இயக்கத்தை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார். மத்திய சேம நிதியின் பலன்களை மிகவும் தாமதமாக அறிந்தவர்கள் பலர் நம்மிடையே இருப்பதால், விழிப்புணர்வை முன்னதாக ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்றார் கழகத்தின் தலைமை நிர்வாகி அகஸ்டின் லீ. தொண்டூழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு அளிக்கும் வகையில் 'சிபிஎஃப் வாலண்டியரிங்' என்ற செயலியும் அமைந்திடும் என்றது கழகம்.

