'சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி ஆறு விழுக்காட்டை மிஞ்சக்கூடும்'

'சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி ஆறு விழுக்காட்டை மிஞ்சக்கூடும்'

2 mins read
dea493b5-3f8b-457e-a467-8f9569ff960d
-

சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்சி, 2021ஆம் ஆண்­டில் ஆறு விழுக்­காட்­டுக்­கும் மேல் இருக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கூறி­யுள்­ளது. இருப்­பி­னும், வெவ்­வேறு துறை­களில் மீட்சி அளவு சம­மற்­ற­தாக இருக்­கும் என்று அது தெரி­வித்­துள்­ளது.

சென்ற ஆண்­டின் முதல் பாதி­யில் இழந்த உற்­பத்­தியை, சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் ஓர­ள­வுக்கு மீட்­டுக்­கொண்­டுள்­ளது. இருப்­பி­னும், 2021ன் முதல் காலாண்­டில் அதன் வளர்ச்சி அடை­யும் வேகத்­தில் தளர்வு ஏற்­பட்­டுள்­ளது.

முன்­னு­ரைக்­கப்­பட்­ட­தைக் காட்­டி­லும் பல துறை­களில் எதிர்­பார்க்­கப்­பட்ட வளர்ச்சி, சம­மற்ற நிலை­யில் அமைந்­துள்­ள­தாக ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அதன் ஈராண்டு பரந்துபட்ட பொரு­ளி­யல் ஆய்வு அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

உற்­பத்­தித் துறைக்­கான வாய்ப்பு­கள் சற்று கூடு­த­லாகி இருந்­தா­லும் விமா­னப் போக்­கு­வ­ரத்து, ஹோட்­டல் துறை­கள் போன்­ற­வற்­றுக்­கான வாய்ப்­பு­கள் இன்­னும் மோச­மா­கி­யுள்­ளன. நாட்டு எல்­லை­கள் விரை­வில் திறக்­கப்­படும் சாத்­தி­யத்தை, அனைத்­து­லக அள­வில் அதி­க­ரித்து வரும் கொவிட்-19 சம்­ப­வங்­களும் ஆங்­காங்கே முளைக்­கும் உரு­மாறிய கிரு­மி­களும் குறைத்­துக்­கொண்டே வரு­கின்­றன.

2019க்கு நிக­ராக பய­னீட்­டா­ளர் செல­வில் மாற்­றம் இல்லை

இதற்­கி­டையே, கொவிட்-19 கொள்­ளை­நோய் சூழ­லி­லும் சென்ற ஆண்டு பய­னீட்­டா­ளர்­கள் செய்த செலவு, 2019ஆம் ஆண்­டுக்கு ஒப்­பாக இருந்­த­தாக ஆணை­யத்­தின் ஆய்வு அறிக்­கை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் வசிப்­போர், பய­ணக் கட்­டுப்­பா­டு­க­ளால் தங்­க­ளின் செலவு­களை இங்­கேயே செய்­தது இதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று கூறப்­பட்­டது.

ஆனால், ஒட்­டு­மொத்த தனிப்­பட்ட செல­வு­கள், கொள்­ளை­நோய்க்கு முந்­தைய அள­வைக் காட்­டி­லும் குறை­வா­கவே இருந்­தது. சிங்­கப்­பூர்­வா­சி­கள் தங்­க­ளின் சேமிப்­பு­களை இதன் மூலம் அதி­க­மாக்­கிக்­கொண்­ட­தாக ஆணை­யம் குறிப்­பிட்­டி­ருந்­தது.

தடை­யற்ற வர்த்­தக உடன்­பாடு மூலம் பலன்

இந்­நி­லை­யில், வட்­டார நிலை­யி­லான விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம் (ஆர்­சி­இபி) மூலம் சிங்­கப்­பூ­ரும் வட்­டார நாடு­களும் பல­ன­டை­ய­வுள்­ள­தாக ஆணை­யம் அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

உல­கின் ஆகப் பெரிய வர்த்­தக உடன்­பா­டான இதன் மூலம், குறைந்த கட்­ட­ணங்­கள், ஒருங்­கிணைக்­கப்­பட்ட வர்த்­தக விதி­முறை­கள் நில­வும்.

அத்­து­டன் அனைத்­து­லக விநி­யோ­கத் தொடர்­களில் சிங்­கப்­பூ­ரும் வட்­டார நாடு­களும் கூடு­தல் பங்­காற்­றிப் பலன் பெறும் என்று அறிக்கை கூறி­யுள்­ளது.

'ஆர்­சி­இபி' மூலம் வட்­டார வர்த்­த­கப் போக்குவரத்து அதி­கரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எல்லை தாண்­டிய உற்­பத்­தித் தொடர்­பு­களும் 15 நாட்­டுப் பொரு­ளி­யல்­க­ளுக்­கி­டையே வலு­வா­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

10 ஆசி­யான் நாடு­க­ளு­டன் ஆஸ்­தி­ரே­லியா, சீனா, ஜப்­பான், நியூ­சி­லாந்து, தென்­கொ­ரியா ஆகி­ய­வை­யும் இணைந்து உரு­வா­கி­ய­து­தான் இந்த 'ஆர்­சி­இபி'. உலக மக்­கள், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி ஆகி­ய­வற்­றில் 30 விழுக்­காட்­டுக்கு இந்த பங்­கா­ளித்­து­வம் ஈடா­கும்.