சுத்தமான எரிசக்திக்கு மாறும் பணிகளை முடுக்கிவிடுவதில் கவனம் செலுத்தப்படும்

சுத்தமான எரிசக்திக்கு மாறும் பணிகளை முடுக்கிவிடுவதில் கவனம் செலுத்தப்படும்

1 mins read
4036923e-0f22-40fb-8022-d6fc1c420917
-

மாசு­ப­டுத்­தக்­கூ­டிய புதை­ப­டிவ எரி­பொ­ரு­ளி­லி­ருந்து மேலும் சுத்­த­மான எரி­சக்தி மூலங்­க­ளுக்கு மாறு­வதை முடுக்­கி­வி­டு­வ­தில் இவ்­வாண்டு அக்­டோ­பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள வரு­டாந்­திர எரி­சக்தி மாநாடு கவ­னம் செலுத்­தும்.

சிங்­கப்­பூர் அனைத்­து­லக எரி­சக்தி வாரம் (சியூ) மாநாட்டை ஒவ்­வோர் ஆண்­டும் ஏற்­பாடு செய்து வரும் எரி­சக்தி சந்தை ஆணை­யம், நேற்று இதனை அறி­வித்­தது.

மேலும் நிலைத்­தன்மைமிக்க, மீள்­தி­ற­னு­டைய அனைத்­து­லக எரி­சக்தி அமைப்­பு­மு­றையை உறு­திப்­ப­டுத்த, இந்த மாற்­றத்­தின் முக்­கி­யத்­து­வம் மாநாட்டு கருப்­பொ­ருள் மூலம் வலி­யு­றுத்­தப்­ப­டு­வ­தாக ஆணை­யத்­தின் தலைமை நிர்­வாகி ஙியாம் ஷெ சுன் தெரி­வித்­தார்.

அத்­து­டன் சியூ மாநாட்­டில் கலந்­து­கொண்டு இந்த எரி­சக்தி உரு­மாற்­றத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய சவால்­க­ளை­யும் வாய்ப்­பு­க­ளை­யும் குறித்து கருத்­து­கள் பகிர்ந்­து­கொள்ள அனைத்து எரி­சக்தி பங்கு­தா­ரர்­க­ளுக்கு அழைப்­பும் விடுத்­தார்.

நவீன பரு­வ­நிலை மாற்­றத்­தின் பிர­தான கார­ணி­யாக, மாசு­ப­டுத்­தும் புதை­ப­டிவ எரி­பொ­ருள் உள்­ளது. எரி­சக்­திக்­காக மனி­தன் இதைப் பெரி­தும் சார்ந்­தி­ருக்­கிறான். இதன் விளை­வு­களை இப்­போதே உணர முடி­கிறது. அதி­வே­க­மாக பனிக்­கட்­டி­கள் உறைந்து வரு­வ­தால் கடல்­நீர் மட்­டம் உயர்ந்து வரு­கிறது. தட்­ப­வெப்ப நிலை­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அத்­து­டன் எதிர்­பா­ராத வானிலை நில­வ­ரங்­கள் மேலும் கடு­மை­யா­கின்­றன.

அத­னால், கொவிட்-19 கொள்­ளை­நோ­யி­லி­ருந்து நிலைத்­தன்­மை­மிக்க ஒரு வழி­யில் மீண்­டு­வர முய­லும் பல நாடு­க­ளுக்கு, இந்­தச் சார்­பு­நி­லை­யைக் குறைப்­பதே பசுமை மீட்­சி­யாக அமை­யும்.

இணை­யம் வாயி­லா­க­வும் நேர­டி­யா­க­வும் நடை­பெ­ற­வுள்ள இந்த மாநாட்­டுக்கு ஜூலை மாதம் முதல் முன்­ப­திவு தொடங்­கும்.