சிங்கப்பூர் மரபுடைமை விழாவில் இவ்வாண்டு மே 3 முதல் 30 வரை, உணவு மற்றும் மருத்துவம் தொடர்பான 130க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. நேரடி மற்றும் மெய்நிகர் நிகழ்ச்சிகளாக வலம்வரவுள்ள இவற்றில், பாரம்பரிய மருத்துவமும் இணைந்துள்ளது. சிங்கப்பூரில் நீண்டகாலம் செயல்பட்டு வரும் ஆயுர்வேத மருந்தகமான 'மலையாள ஆயுர்வேத வைத்தியசாலா', விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளது. 18வது ஆண்டாக நடைபெறும் விழா நிகழ்ச்சிகளுக்கு, இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
மரபுடைமை விழாவில் ஆயுர்வேத மருத்துவம்
1 mins read
-

