16,666 மரங்களை நடும் திட்டத்திற்கு $5 மி. வழங்க உறுதி

16,666 மரங்களை நடும் திட்டத்திற்கு $5 மி. வழங்க உறுதி

1 mins read
f169d1b9-6a85-43e3-b760-c9273a07c31d
-

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் 16,666 மரங்­களை நடும் திட்­டத்­திற்கு, 'ஏஐஏ சிங்­கப்­பூர்' $5 மில்­லி­யன் வழங்க உறு­தி­ய­ளித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேலான மரங்­களை 2030ஆம் ஆண்­டுக்­குள் நட­வேண்­டும் என்ற தேசிய பூங்கா கழ­கத்­தின் 'ஒன்­மில்­லி­யன்­டி­ரீஸ்' இயக்­கத்­திற்கு ஆத­ர­வாக, பூங்­காக்­க­ளி­லும் இயற்­கைப் பாது­காப்பு வனப்­ப­கு­தி­க­ளி­லும் இம்­ம­ரங்­கள் நடப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இது­வரை நிறு­வ­னங்­கள் வழங்­கி­ய­தி­லேயே ஆகப் பெரிய தொகை இந்த $5 மில்­லி­யன் நன்­கொடை. கழ­கத்­தின் கீழ் இயங்­கி­வ­ரும் பூந்­தோட்ட நகர நிதி­யில் இத்­தொகை சேர்க்­கப்­படும்.

'ஏஐஏ சிங்கப்பூர்' நிறு­வ­னம் அதன் 90வது ஆண்டு நிறைவை சிங்­கப்­பூ­ரில் கொண்­டா­டிய வேளை­யில், இந்த உறு­தி­மொ­ழி­யை அளித்துள்ளது.

மேலும், தங்­க­ளின் ஆண்டு நிறைவை அனு­ச­ரிக்­கும் வகை­யில், லோவர் சிலேத்­தார் நீர்த்­தேக்­கத்­தில் அமைந்­துள்ள 'ரோவர்'ஸ் பே' பகு­தி­யில் நேற்று காலை 90 மரங்­கள் நடப்­பட்­டன.

150 கிலோ­மீட்­ட­ர் நீளமுள்ள சுற்­றுத்­தீவு பாதை போன்ற பூங்கா இணைப்­பு­க­ளின் பசு­மையைக் கூட்­டும் வகையில் நடப்­படும் மரங்­கள் அமையும் என்­றார் நிகழ்­ச்சியில் கலந்­து­கொண்ட தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ.

அத்­து­டன் கடந்த ஆண்­டில் மட்­டும் 200,000க்கும் மேற்­பட்ட மரங்­கள் நடப்­பட்­ட­தா­க­வும் அமைச்­சர் லீ குறிப்­பிட்­டார்.