5,500 ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை

5,500 ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை

2 mins read
a4c68870-c172-4404-bd80-2b3d4775d17f
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கு­வி­டு­தி­களில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க முன்­னெச்­ச­ரிக்கை நட­

வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இம்­மா­தம் 23ஆம் தேதி­யி­லி­ருந்து 26ஆம் தேதி வரை 5,500க்கும் அதி­க­மான வெளி­நாட்டு ஊழி­யர்

களுக்கு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு நேற்று கூறி­யது.

வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ்

தங்­கு­வி­டு­தி­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறு­தி­யா­ன­தும் இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

வெஸ்ட்­லைட் உட்­லண்ட்ஸ்

தங்­கு­வி­டு­தி­யில் வசிக்­கும் 26 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அவர்­களில் இரு­வ­ருக்கு கொவிட்-19 பாதிப்பு இல்லை என்று பிறகு உறுதி செய்­யப்­பட்­டது. 11 பேரி­ட­மி­ருந்து கொவிட்-19 கிருமி பர­வும் அபா­யம் இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

தங்­கு­வி­டு­தி­களில் தங்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு 14 நாட்­க­ளுக்கு ஒரு­முறை கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்

படு­வ­து­டன் கூடு­த­லாக இந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­பட்­டுள்­ளது. கிரு­மித்­தொற்­றால் இது­வரை பாதிப்­ப­டை­யாத ஊழி­யர்­க­ளுக்­கும் ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு குணம் அடைந்த ஊழி­யர்­க­ளுக்­கும் மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­ப­டு­கிறது.

மருத்­து­வப் பரி­சோ­த­னைக்கு உட்­பட்ட 5,500க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களில் பாதிக்­கப்­பட்­டுள்ள

தங்­கு­வி­டு­தி­களில் தங்­கு­ப­வர்­களும் பாதிக்­கப்­பட்­டோ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­களும்

அடங்­கு­வர்.

சுகா­தார அமைச்சு, கட்­டட,

கட்­டு­மான ஆணை­யம், பொரு­ளி­யல் மேம்­பாட்டு வாரி­யம் ஆகி­ய­வற்­று­டன் இணைந்து முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கையை மனி­த­வள அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

இதற்­கி­டையே, கொரோ­னா­

வி­லி­ருந்து குண­ம­டைந்த ஊழி­யர்­

க­ளுக்கு மீண்­டும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­காது என்­றும் முந்­திய பாதிப்­பின் கார­ண­மாக அவர்­க­ளது உடலுக்குள் சிறி­த­ளவு கொவிட்-19 கிருமி இருக்­கக்­கூ­டும் என்று மனி­த­வள அமைச்சு கூறி­யது. அது உண்மையாக இருந்தால் அவர்­

க­ளி­ட­மி­ருந்து கிருமி பர­வும் அபாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

"இது புதிதாக ஏற்பட்ட கிருமிப் பரவல் அல்ல. பழைய கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு. எனவே பதற்றம் அடையத் தேவையில்லை," என்று மனிதவள அமைச்சின் மருத்துவ இயக்குநர் டாக்டர் லாம் மெங் சோன் தெரிவித்தார்.