சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் 23 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 61,086ஆக அதிகரித்துள்ளது.
சமூக அளவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர்கள்
தங்குவிடுதியில் புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.
பாதிக்கப்பட்ட 20 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
சிங்கப்பூர் வந்ததும் அவர்
களுக்கு இல்லத் தனிமை உத்தரவு விதிக்கப்பட்டது அல்லது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
நேற்று முன்தினம் சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட் டது. பாதிக்கப்பட்டவர் இந்தோனீ சியக் கப்பலில் பணிபுரிபவர்.
ஏற்கெனவே அந்தக் கப்பலில் பணிபுரிந்த ஐவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட கப்பல் சிப்பந்தி, முதல்முறை கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள இம்மாதம் 8ஆம் தேதியன்று கப்பலிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
அதைத் தவிர்த்து அவர் கப்பலிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து வந்த 11 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இந்தியா, ஐவரி கோஸ்ட், மலேசியா போன்ற நாடு
களிலிருந்து வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு சமூக அளவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒன்பதாகப் பதிவானது. இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 11ஆக அதிகரித்தது.
கொரோனா கிருமித்தொற்றி
லிருந்து குணமடைந்து நேற்று முன்தினம் 22 பேர் வசிப்பிடம் திரும்பினர்.
இதுவரை 60,689 பேர் அந்
நோயிலிருந்து முழுமையாகக் குணம் அடைந்துவிட்டனர்.
மொத்தம் 108 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருமித்தொற்றிலிருந்து குண
மடைந்து வருபவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 221 பேர் ஓய்வெடுத்து வருகின்றனர். கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் 30 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

