குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவும் மின்னிலக்கத் திறன்கள் திட்டம்

குறைந்த வருமான குடும்பங்களுக்கு உதவும் மின்னிலக்கத் திறன்கள் திட்டம்

2 mins read
138ab995-f92f-4716-a416-dfa8d6ad32ee
-

குறைந்த வரு­மான குடும்­பங்

­க­ளுக்கு மின்­னி­லக்­கத் திறன்­

க­ளைக் கற்­பிக்க 'மின்­னி­லக்­க­

மு­றைக்­குத் தயா­ராக இருக்­கும் குடும்­பங்­கள்' திட்­டம் உத­வு­கிறது.

இந்த அறி­மு­கத் திட்­டம் கடந்த ஆண்டு நவம்­பர் மாதத்­தி­லி­ருந்து டிசம்­பர் மாதம் வரை முதன்முதலில் நடைபெற்றது. குடும்ப வரு­மா­னம் தலா ஒரு­வ­ருக்கு $650க்கும் குறை­வாக இருக்­கும் 16 குடும்­பங்­

க­ளுக்கு முத­லில் உதவி வழங்­கப்­பட்­டது. அதன் பிறகு மூன்று மாதங்­கள் கழித்து பங்­கெ­டுத்­த­வர்­க­ளி­டம் ஆய்வு நடத்­தப்­பட்­டது.

திட்­டத்­தில் பங்­கெ­டுத்த பிறகு தங்­கள் பிள்­ளை­கள் மின்­னி­லக்க சாத­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும்­போது தேவை­யான கட்­டுப்­பா­டு­களை விதிக்க, தகுந்த விளக்­கங்­

க­ளைத் தர முடிந்­த­தாக பெற்­றோர் தெரி­வித்­த­னர்.

மின்­னி­லக்­கப் பயிற்சி பெற்று பிள்­ளை­க­ளுக்­குப் புரி­யும் வகை­யில் சரி­யான விளக்­கத்தை பெற்­றோ­ரால் அளிக்க முடி­வ­தால் அவர்­கள் கூறு­வ­தைக் கேட்டு பிள்­ளை­கள் அதன்­படி நடந்­து­கொள்­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் மின்­னி­லக்­கச்

சாத­னப் பயன்­பாடு தொடர்­பில் பெற்­றோ­ருக்­கும் பிள்­ளை­க­ளுக்­கும் இடையே இருந்த விரி­சல்­கள் குறைந்­தி­ருப்­ப­தாக 60 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் தெரி­வித்­துள்­ளன. அடுத்­த­ பயிற்சி இம்­மா­தம் தொடங்கி அடுத்த மாதம் வரை நடைபெறுகிறது. இதில் 44 குடும்­பங்­க­ளுக்கு உதவி வழங்­கப்­ப­டு­கிறது.

இந்­தத் திட்­டத்­துக்கு ஆண்டு தோ­றும் நடத்­தப்­படும் நிதி­தி­ரட்டு நிகழ்ச்­சி­யான அதி­பர் சவால் 2021 ஆத­ரவு வழங்­கு­கிறது.

ஃபேஸ்புக், மைக்­ரோ­சா­ஃப்ட் ஆகிய நிறு­வ­னங்­களும் நிதி­யு­தவி அல்­லது தொண்­டூ­ழி­யம் மூலம் ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாடு, கண்­காட்சி நிலை­யத்­தில் நடை­பெற்ற 'டச்' குடும்ப மாநாட்­டில் திட்­டத்­தின் சின்­னம் அறி­மு­கப்­

ப­டுத்­தப்­பட்­டது.

இந்த நிகழ்ச்சி நேற்­றும் இன்றும் நடை­பெ­று­கிறது. இணை­யம் வாயி­லா­க­வும் நேர­டி­யா­க­வும் 400க்கும் மேற்­பட்­டோர் இதில் பங்­கெ­டுக்­கின்­ற­னர். குடும்­பங்­க­ளுக்கு ஏற்­படும் மன­வு­ளைச்­சல்­க­ளுக்­கான கார­ணங்­கள், குடும்ப மீள்­தி­றன் போன்­ற­வற்­றில் மாநாடு கவ­னம் செலுத்­து­கிறது. இணை­யம் வழி தொல்லை விளை­விக்­கும் பிரச்­சினை, கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லை­யின்­போது திரு­ம­ண­மான பெண்­க­ளுக்கு ஏற்­படும் மன­

உளைச்­சல் போன்ற விவ­கா­ரங்­கள் குறித்து மாநாட்­டில் கலந்­து­ரை­யா­டல்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. மாநாட்­டின் சிறப்பு விருந்­தி­ன­ராக கலா­சார, சமூக, இளை­யர் அமைச்­சர் எட்­வின் டோங் நேற்று கலந்­து­கொண்­டார்.

'ஒவ்­வொரு குடும்­பத்­தின் மன­தில்' என்ற கருப்­பொ­ரு­ளு­டன் மாநாடு நடத்­தப்­பட்­டது.

உதவி தேவைப்­படும் குடும்­பங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க தனி­யார், அர­சாங்­கத் துறை­கள் ஒன்­றி­ணை­வது மகிழ்ச்­சி­யைத் தரு­வ­தாக அமைச்சர் தெரி­வித்­தார்.