'வெளிநாட்டுப் பயணம் எளிதாகலாம்'

'வெளிநாட்டுப் பயணம் எளிதாகலாம்'

2 mins read
a8e66ae0-03e0-493a-ba9c-9598e99d7c95
-

தடுப்பூசி போட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலிலிருந்து விலக்களிப்பது பற்றி பரிசீலனை

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூர் மக்­கள், குறைந்த அளவு தொற்று பதி­வான நாடு­க­ளுக்­குச் சென்று நாடு திரும்­பும்­போது அவர்­களுக்கு தனி­மைப்­ப­டுத்­தலில் இருந்து விலக்கு அளிப்­பது குறித்து சிங்­கப்­பூர் பரி­சீ­லிக்­க­லாம் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­குக்கும் இடை­யி­லான பயண ஏற்­பாட்­டின்­படி மே 26ஆம் தேதி­யில் இரு நாடு­க­ளுக்­கும் இடையே மேற்­கொள்­ளப்­படும் பய­ணங்­க­ளுக்கு இரு நாடு­க­ளி­லும் தனி­மைப்­ப­டுத்­த­லில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­கிறது. அதே­போல் மேலும் பய­ணங்­க­ளுக்கு வழி­வி­டும் வகை­களை சிங்­கப்­பூர் ஆராய்ந்து வரு­வ­தாக அமைச்­சர் ஓங் நேற்று தெரி­வித்­தார்.

பிரிட்­டன், டென்­மார்க், பிரான்ஸ், ஜெர்­மனி, அமெ­ரிக்கா போன்ற நாடு­கள் ஏற்­கெ­னவே சிங்­கப்­பூ­ரில் இருந்து வரும் பய­ணி­க­ளுக்கு தனி­மைப்­ப­டுத்­த­லில் இருந்து விலக்கு அளித்­துள்­ளன என்று அமைச்­சர் ஓங் 91.3 எஃப்.எம். வானொ­லிக்கு அளித்த பேட்­டி­யின்­போது தெரி­வித்­தார்.

பிரிட்­டன், அமெ­ரிக்கா போன்ற நாடு­களில் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­கள் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன. அத­னை­ய­டுத்து அந்­நா­டு­களில் கொவிட்-19 தொற்­றுப் பாதிப்பு குறைந்து வரு­கிறது. இருந்­தா­லும் சிங்­கப்­பூ­ரில் அந்­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு தனி­மைப்­படுத்­த­லில் இருந்து விலக்கு அளிக்­கும் வகை­யில் அந்த அள­வுக்கு அந்­நா­டு­களில் தொற்று குறை­ய­வில்லை.

அந்­நாட்­டுப் பய­ணி­க­ளுக்கு இங்கு தனி­மைப்­ப­டுத்­த­லில் விலக்கு அளிப்­ப­தற்கு அந்­நா­டு­களில் தொற்­றுப்­பா­திப்பு பூஜ்­யத்­தில் இருக்க வேண்­டு­மென்­ப­தில்லை.

மேலும் குறை­வான அள­வுக்கு தொற்­றுப் பாதிப்பு கொண்­டு­வ­ரப்­பட்­டால் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் அந்­நா­டு­க­ளுக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வது குறித்து பரி­சீ­லிக்­க­லாம். மீண்­டும் அவர்­கள் சிங்­கப்­பூ­ருக்குத் திரும்­பு­கை­யில் தனி­மைப்­ப­டுத்­த­லுக்­குப் பதி­லாக கொவிட்-19 சோதனை செய்­து­கொள்­ள­லாம் என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் ஹாங்­காங்­குக்­கும் இடை­யி­லான பயண ஏற்­பா­டு­கள் வெற்றிபெற்­றால் அது மற்ற நாடு­க­ளுக்­கும் முன்­மா­தி­ரி­யாக இருக்­கும் என்­றார் அமைச்­சர்.

வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்­குத் தேவை அதி­கம் இருந்­த­போதும், தொற்றுச் சூழல் தொடர்ந்து மாறி­வ­ரு­வ­தால் கவ­னம் தேவை என்று திரு ஓங் எச்­ச­ரித்­தார்.