ஹெங் சுவீ கியட்டுக்கு ஆக உயரிய தொழிற்சங்க விருது

ஹெங் சுவீ கியட்டுக்கு ஆக உயரிய தொழிற்சங்க விருது

2 mins read
8b964d32-1ffe-4907-8654-ec383febfcf4
துணைப் பிர­தமரும் நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட்­டுக்கு இவ்­வாண்­டின் ஆக உய­ரிய மே தின விரு­தான கௌர­வப் பதக்­கம் வழங்­கப்­பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட் 19 கிரு­மிப்­ ப­ர­வ­லில் இங்­குள்ள வர்த்­த­கங்­களையும் ஊழி­யர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைக் காக்­க­வும் உத­வி­ய­தற்­காக துணைப் பிர­தமரும் நிதி அமைச்­ச­ரு­மான ஹெங் சுவீ கியட்­டுக்கு இவ்­வாண்­டின் ஆக உய­ரிய மே தின விரு­தான கௌர­வப் பதக்­கம் வழங்­கப்­பட்டது.

தொழி­லா­ளர் இயக்­கத்­துக்கு உய­ரிய சேவை­யாற்­றி­யுள்ள நபர்­க­ளுக்கு தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் கௌர­வப் பதக்­கம் வழங்­கப்­ப­டு­கிறது.

கடந்­தாண்டு ஐந்து வரவு செல­வுத் திட்­டங்­களை அறி­வித்து, பொரு­ளி­யல் நெருக்­க­டி­யைச் சமா­ளிக்க நிறு­வ­னங்­க­ளுக்கு பெரு­ம­ளவு உத­வி­ய­தில் அவர் ஆற்­றிய பங்­குக்­காக திரு ஹெங் அந்த விரு­தைப் பெற்­றார். ஊழி­யர்­கள் தொடர்ந்து வேலைத் தகு­தி­யு­டன் இருக்­கத் தேவை­யான திறன்­களை அவர்­கள் பெற உத­வும் கொள்­கை­க­ளை­யும் திரு ஹெங் முன்­னெ­டுத்­தார்.

சிங்­கப்­பூ­ரின் அடுத்த பிர­த­ம­ரா­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டி­ருந்த திரு ஹெங், மக்­கள் செயல் கட்­சி­யின் நான்­காம் தலை­மு­றைத் தலை­வர்­க­ளின் தலை­மைப் பொறுப்­பி­லி­ருந்து ஒதுங்­கு­வ­தாக இம்­மா­தம் 8ஆம் தேதி அறி­வித்­தி­ருந்­தார்.

கொவிட் 19 பர­வ­ல் இதற்கு முன்­ எப்போதுமில்­லாத பொரு­ளி­யல் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யது என்­றும் அது நிதி அமைச்சு அதி­கா­ரி­கள் எதிர்­நோக்­கிய மிகப் பெரும்­ ச­வால் என்றும் திரு ஹெங், தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சின் லேபர்­பீட் வலைப்­ப­தி­வுக்கு அளித்த பேட்­டி­யில் கூறி­யி­ருந்­தார்.

பொரு­ளி­யல் நெருக்­க­டி­யால் சில வர்த்­த­கங்­கள் திடீ­ரென்று நொடித்­துப்போயின.

வேலை­யும் சம்­ப­ள­மும் தொட­ருமா என்று ஊழி­யர்­கள் அச்­சப்­பட்­ட­னர். அவர்­க­ளுக்கு உதவ வழக்­க­மாக சில மாதங்­களில் வகுக்­கப்­படும் வரவு செல­வுத் திட்ட நட­வ­டிக்­கை­கள் சில வாரங்­களில் வகுக்­கப்­பட்டு, முடிந்­த­வரை சீக்­கி­ர­மாக நடப்­புக்­குக் கொண்டு வரப்­பட்­ட­தாக திரு ஹெங் தெரி­வித்­தார். தொழி­லா­ளர் இயக்­கத்­துக்கு ஆற்­றிய அரும்­ப­ணிக்­காக நேற்று தேசிய தொழிற்­சங்­கக் காங்­கி­ரஸ் திரு ஹெங் உள்­ளிட்ட 143 பேருக்கு விரு­து­களை வழங்கியது.

விருதுபெற்ற இந்தியர்கள்

தொழிற்­சங்­க­வா­தி­க­ளுக்கு வழங்­கப்­படும் உய­ரிய விரு­தான 'தொழி­லா­ளர் தோழர்' எனப்­படும் Comrade of Labour (Star) (Bar), விருதை நேற்று எரி­சக்தி எரி­வாயு தொழிற்­சங்­கத்­தின் முன்­னாள் கெள­ர­வப் பொதுச் செய­லா­ளர் அம­ரர் திரு சி. நாச்­சி­யப்­பன் பெற்­றார். 'தொழி­லா­ளர் தோழர்' (Star) விருது பெற்­ற­வர்­களில் சிங்­கப்­பூர் விமான நிலைய முனை­யச் சேவை­க­ளின் தொழிற்­சங்­கத்­தின் முன்­னாள் பொதுச் செய­லா­ளர் அம­ரர் திரு சி.குண­சே­க­ர­னும் அடங்­கு­வார்.

வெவ்­வேறு விரு­துப் பிரி­வு­களில் இடம்­பெற்ற சில இந்­தி­யர்­கள்: டிலன் பிள்ளை சந்­தி­ர­சே­கரா, ஜெயம்ஸ் டிங்ரா, முரு­கே­சன் ராஜேந்­தி­ரன், முகம்­மது சிடிக், அ.மகேந்­தி­ரன், சி.தமிழ்­வா­ணன், த.சிங்­கா­ரம், எம்.சோம­சுந்­த­ரம், கு.பூபா­லன், கருப்­பன் செட்­டி­யார் பழ­னி­யப்­பன், பூபதி நீ சதாசூ, ப.செல்­வ­கு­மார், பால­சுந்­தர சிவ­பெ­ரு­மான், பிலிப் தேவ­தா­சன் சேமி­முள், சதீ­‌ஷ்ஸ்ரீ நாயர், ஓம் அஜே அமர்.

"இவ்­வி­ருது கிடைத்­த­தில் பெரு­மி­தம் கொள்­கி­றேன். தொழி­லா­ளர்­க­ளுக்கு கூடு­தல் உதவி புரிய வேண்­டும் என்ற உற்­சா­கத்தை இது அளிக்­கிறது," என்று தெரி­வித்­தார் தொழி­லா­ளர் தோழர் விருது பெற்­ற­வர்­களில் ஒரு­வ­ரான ரசா­ய­னத் துறை­க­ளின் தொழிற்­சங்­கத்­தின் துணைத் தலை­வர் திரு அ.மகேந்­தி­ரன், 59. (கூடு­தல் செய்தி:

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்)