‘என் பேரனை நினைத்தால் கவலையாக இருக்கிறது’

டான் டோக் செங் மருத்துவமனையில் தங்கியிருந்த மூதாட்டிக்கு கொவிட்-19 அறிகுறிகள்

டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் பொது வார்டு ஒன்­றில் தங்கி­ இ­ருந்த 72 வயது மூதாட்­டிக்கு கொவிட்-19 தொற்று தொடர்­பான அறி­கு­றி­கள் ஏற்­பட்ட நிலை­யில், அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது பரி­சோ­த­னை­யில் உறு­தி­யா­கியது. அதை­ய­டுத்து மூதாட்டி தனிமை வார்­டுக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார்.

அதே வார்­டில் தாதி­யாக வேலை பார்த்த பிலிப்­பீன்ஸ் நாட்­ட­வ­ருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டதை அடுத்து வார்­டி­லி­ருந்து எவரும் வெளி­யே­றவோ உள்ளே செல்­லவோ கூடாது என்ற கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டது.

அத்­து­டன் பாதிக்­கப்­பட்ட வார்­டைச் சேர்ந்த ஊழி­யர்­கள், நோயாளி­கள் ஆகி­யோரிடம் கொவிட்-19 பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டது. பரி­சோ­த­னை­யில் மூதாட்டி ஓங் கிம் சூவுக்­குத் தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

அவ­ரு­டன் மேலும் நால்­வ­ருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.

மூட்டு அழற்சி தொடர்­பில் திரு­வாட்டி ஓங், மருத்­து­வ­ம­னை­யின் 'சி' பிரிவு வார்­டில் சேர்க்­கப்­பட்­டார். ஆனால், சென்ற சனிக்­கி­ழ­மை­யன்று அவ­ரது தொண்­டை­யில் எரிச்சல் ஏற்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

மறு­நாளே, இரு­ம­லு­டன் காய்ச்­சலும் வந்­தது. செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தொண்­டை­யில் வலி அதி­கரித்­த­து­டன் மறு­நாள் உடம்பு வலி­யும் ஏற்­பட்­டது.

அதே நாளில் அவ­ருக்கு கொவிட்-19 பரி­சோ­த­னை­யும் செய்­யப்­பட்­டது.

வார்­டில் இருந்த நோயா­ளி­கள் முகக்­க­வ­சங்­கள் அணி­ய­வில்லை என்­றும் அறுவை சிகிச்­சைக்­கு­ரிய முகக்கவ­சத்தை வார்­டில் வேலை பார்த்த மருத்­து­வர்­கள் மற்­றும் தாதி­யர் அணிந்­தி­ருந்­த­னர் என்­றும் கூறப்­பட்­டது.

திரு­வாட்டி ஓங்­கைத் தவிர, மேலும் இரண்டு நோயா­ளி­கள் மற்­றும் மருத்­து­வர் ஒரு­வ­ருக்­கும் கொவிட்-19 தொற்று இருப்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

இந்­நால்­வர் மீதும் மேற்­கொண்டு பரி­சோ­தனை நடத்தி வரு­வ­தால் புதன்­கி­ழமை நில­வ­ரத்­தில் இவர்­கள் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

திரு ஓங் இன்­ன­மும் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­வில்லை. தொடர்­பு­க­ளின் தட­ம­றி­யும் அதி­கா­ரி­கள் தம்­மி­டம் விவ­ரம் கேட்­ட­து­டன் தாம் சந்­தித்த நபர்­களைப் பற்­றி­யும் அறிய விரும்­பி­ய­தாக அவர் கூறி­னார்.

திரு­வாட்டி ஓங்கை மருத்­து­வ­மனை­யில் தின­மும் வந்து பார்த்த அவ­ரின் கண­வர், இல்­லத்­தில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

மூதாட்­டி­யின் மகன் மற்­றும் ஏழு வயது பேரன் நேற்று முதல் ஹோட்­டல் ஒன்­றில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அதே ஹோட்­ட­லில் மூதாட்­டி­யின் மகளும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

மருத்­து­வ­மனை தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டைய சிலர், அந்த ஹோட்­ட­லில் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் முக­ரும் ஆற்­றலை சற்று இழந்­தது போல் தோன்­று­வ­தாக திரு­வாட்டி ஓங் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தார். மூச்­சுத் திண­றல் இல்லை என்­றும் முகக்­க­வ­சம் அணிந்­தால் மட்­டுமே அது ஏற்­ப­டு­கிறது என்­றும் மூதாட்டி பகிர்ந்­து­கொண்­டார்.

மேலும், தம் குடும்­பத்தை நினைத்­தால் கவ­லை­யாக உள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.

"என் மகன், மகள் இரு­வ­ருக்­கும் பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள். என்னை வந்து அவர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் பார்த்­த­தில் எனக்கு கோபம். குறிப்­பாக, என் பேரனை நினைத்­தால் கவ­லை­யாக இருக்­கிறது. என்னை வந்து பார்க்க வேண்­டாம் என்று நான் கூறி­யிருந்­தேன். இப்­போது அவர்­க­ளின் குடும்ப வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் திரு­வாட்டி ஓங்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!