சமய மறுவாழ்வுக் குழுவின் பங்கு குறித்து துணைப் பிரதமர்

சமய மறுவாழ்வுக் குழுவின் பங்கு குறித்து துணைப் பிரதமர்

1 mins read
c9db2801-9da3-441b-ba5f-7d192182764d
சமய மறுவாழ்வுக் குழுவின் வளநிலையத்தைப் பார்வையிடும் துணைப் பிரதமர் ஹெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழமை வாய்ந்த பள்­ளி­வா­சல்­களில் ஒன்­றான கதிஜா பள்­ளி­வா­ச­லி­லும் சமய மறு­வாழ்­வுக் குழு­வின் வள­நி­லை­யத்­தி­லும் புதுப்­பிப்­புப் பணி­கள் நடை­பெ­ற­வுள்­ளன. சமூ­கத்­திற்கு மேலும் சிறப்­பாக சேவை­யாற்ற இப்­ப­ணி­கள் நடை­பெ­ற­வுள்­ள­தாக நேற்று கூறப்­பட்­டது.

வெளிப்­பு­றக் காட்­சிக்­கூ­டம், பல்­நோக்கு மண்­ட­பம், புதிய நுழை­வா­யில், விருந்து உப­ச­ரிப்பு பகுதி போன்ற பல்­வேறு மேம்­பா­டு­கள் அமை­ய­வுள்­ளன.

புதுப்­பிப்பு தொடர்­பில் நேற்று அறி­விக்­கப்­பட்ட நிகழ்ச்­சி­யில் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கலந்­து­கொண்­டார்.

சமய மறு­வாழ்­வுக் குழு­வின் பணி­களில் பள்­ளி­வா­ச­லின் பெரும் பங்கு மற்­றும் புரிந்­து­ணர்வு, சகிப்­புத்­தன்மையை ஏற்­ப­டுத்­து­வ­தில் குழு­வின் முக்­கிய பங்கு ஆகி­ய­வற்றை அவர் கோடிட்டார்.