விபத்து: கொழுந்துவிட்டு எரிந்த தீயில் நால்வர் காயம்

விபத்து: கொழுந்துவிட்டு எரிந்த தீயில் நால்வர் காயம்

1 mins read
1f2932cf-c2a4-412c-b2fe-dc9fa6b2086f
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து நெருப்பை அணைத்தனர். படம்: ஷின் மின் -

விபத்­துக்­குள்­ளான வேன் ஒன்று, தீப்­பற்றி எரிந்த சம்­ப­வத்­தில் நால்­வ­ருக்­குத் தீக்­கா­யங்­கள் ஏற்­பட்­டன. திங்­கட்­கி­ழமை மாலை ஜூரோங் ஹில் பகு­தி­யில் நடந்த இவ்­வி­பத்து தொடர்­பில் 22 வயது ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

ஆட­வர் போதை­யில் வாக­னம் ஓட்­டி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது. 17 வய­துக்­கும் 21 வய­துக்­கும் இடைப்­பட்ட நான்கு பய­ணி­கள் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது சுய­நி­னை­வு­டன் இருந்­த­தாக போலிஸ் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

கட்­டுப்­பாட்டை இழந்த நிலை­யில் அரு­கி­லி­ருந்த புத­ருக்­குள் வேன் சென்­ற­தா­க­வும் பின் அது கவிழ்ந்­த­தா­க­வும் ஷின் மின் செய்­தித்­தாள் தெரி­வித்­தது.

அத்­து­டன் வேனில் மொத்­தம் ஏழு பேர் இருந்­த­னர் என்­றும் ஷின் மின் கூறி­யி­ருந்­தது. அவர்­களில் ஒரு­வர் நெருப்­பி­லி­ருந்து தப்­பித்து ரத்த வெள்­ளத்­தில் இருந்­த­வாறு உதவி கோரி­ய­தா­க­வும் செய்­தித்­தாள் தெரி­வித்­தது.

எரி­யும் வாக­னத்­தி­லி­ருந்து கரும்­புகை வரு­வ­தைக் காட்­டும் காணொளி சமூக ஊட­கங்­களில் வலம் வரு­கிறது. நெருப்பு மூண்­ட­தற்­கான கார­ணம் குறித்து விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.