கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இங்குள்ள ஆறு பள்ளிவாசல்களுக்குச் சென்றிருந்தது குறித்து கடந்த இரண்டு நாட்களாக தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என முயிஸ் நேற்று அறிக்கை விடுத்தது. பள்ளிவாசல்களுக்கு இவர்கள் சென்றபோது, நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இவர்களிடம் இல்லை என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து பள்ளிவாசல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. உட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள யூசோஃப் இஷாக் பள்ளிவாசல், புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள அல்-இமான் பள்ளிவாசல் உட்பட பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களில் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அவை இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மீண்டும் திறக்கப்படும். பள்ளிவாசலில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் இருப்பதன் முக்கியத்துவம், தொடர்புகளின் தடமறிவதற்கு 'டிரேஸ்டுகெதர்' பயன்பாடு ஆகியவற்றை இச்சம்பவம் நினைவூட்டுவதாக முயிஸ் அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தது.
கொவிட்-19: மூடப்பட்ட பள்ளிவாசல்கள் இன்று திறப்பு
1 mins read
-

