குற்றம்: சுவாசக்குழாய் தொற்றுடன் மகன் பயிலும் பாலர் பள்ளிக்குச் சென்றார்

2 mins read
fe1181fb-8c00-45e9-9124-7274ad919efc
-

சுவா­சக்­கு­ழாய் நோய்க்­காக மருத்­துவ விடுப்­பில் இருந்த 24 வயது மலே­சி­யர் மிஷெல் ஃபூ ஷி சிங், தன் மக­னைப் பாலர் பள்­ளிக்கு அழைத்­துச் சென்­ற­து­டன் பள்ளி முடிந்து வீட்­டுக்கு அழைத்­தும் வந்­தி­ருந்­தார்.

பிற­ருக்­குத் தொற்­றைப் பரப்­பும் அபா­யத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தால் தொற்­று­நோய்த் தடுப்­புச் சட்­டத்­தின்­கீழ் நேற்று மாது மீது ஐந்து குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கின.

ஃபூவுக்­குத் தரப்­பட்ட மருத்­துவ விடுப்பு, சென்ற ஆண்டு ஜூலை 14 முதல் 18ஆம் தேதி வரை­யிலானது. அதன்­படி ஃபூ எங்­கும் போகா­மல் வீட்­டி­லேயே இருக்­க­வேண்­டும்.

ஆனால், சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான ஃபூ, ஜூலை 14க்கும் 17க்கும் இடைப்­பட்ட நாட்­களில் பிடோக் நார்த் ஸ்தி­ரீட் 2ல் உள்ள ஒரு புளோக்­கி­லி­ருந்து, பிடோக் நார்த் ரோடு புளோக் 184ல் அமைந்­துள்ள 'பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ்' பாலர் பள்­ளிக்கு மக­னு­டன் சென்று வந்­தார்.

மேலும், மெக்­பெர்­சன் லேனில் உள்ள ஒரு வீவக புளோக்­கிற்கு 'கிராப்' சவாரி செய்­தி­ருந்­தார்.

அது­மட்­டு­மல்­லா­மல் 'கிரேட் வேர்ல்ட் சிட்டி' கடைத்­தொ­கு­திக்­குச் சென்று அங்கு அமைந்­துள்ள திரை­ய­ரங்­கில் ஜூலை 17ஆம் தேதி­யன்று பட­மும் பார்த்­துள்­ளார்.

அதே நாளன்று டாக்­சி­யில் சவாரி செய்து பிடோக் நார்த்­துக்­குத் திரும்­பி­ உள்­ளார்.

பிடோக் நார்த் வட்­டா­ரத்­தில் உள்ள வேறொரு 'பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ்' பாலர் பள்ளி­யில் கொவிட்-19 கிரு­மிக்­கு­ழு­மம் ஒன்று சென்ற ஆண்டு மார்ச் மாதம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து ஃபூ இவ்­வாறு செய்­திருந்­தார் என்று கூறப்­ப­டு­கிறது.

ஃபூ மீதான வழக்கு மீண்­டும் ஜூன் 10ஆம் தேதி­யன்று தொட­ரும்.

நிரூ­ப­ண­மா­கும் ஒவ்­வொரு குற்­றச்­சாட்­டுக்­கும் ஆறு மாத சிறைத் தண்­டனை அல்­லது $10,000 வரை­யி­லான அப­ரா­தம் ஃபூவுக்கு விதிக்­கப்­ப­ட­லாம்.