நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் (பிஎம்இ) ஆகிய பிரிவினருக்குக் கைகொடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, அவர்
களுக்கு குறிப்பிட்ட சில வேலைகளை ஒதுக்குவது உள்ளிட்ட நடைமுறைகள் கருத்தில் கொள்ளப்படுவதாக தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.
'என்டியுசி இன்கம்' என்று அழைக்கப்படும் தனது காப்புறுதி நிறுவனம் மூலம் வேலையில்லா தோருக்கு ஒருவகை காப்புறுதித் திட்டம் ஒன்றை அமைக்க என்டியுசி யோசித்து வருவதாக திரு இங் நேற்று கூறினார்.
நியாயமான பரிசீலனை ஏற்பாட்டையும் இதர அரசாங்கக் கொள்கைகளையும் இன்னும் சிறந்த முறையில் செயல்படுத்த மனிதவள நிபுணர்களுடன் சேர்ந்து அணுக்கமாகப் பணியாற்றலாம் என்று என்டியுசி நம்புகிறது.
பிஎம்இ பணிக்குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்டது.
இதுவரை 8,000 பிஎம்இ ஊழியர்களிடம் அது ஆய்வுகள், கலந்துரையாடல்கள் ஆகியவை மூலம் தொடர்புகொண்டுள்ளது.
பிஎம்இ ஊழியர்களுக்கு எவ்வாறு கூடுதல் ஆதரவு வழங்கலாம் என்பது குறித்த பரிந்துரைகளை இவ்வாண்டு இறுதிக்குள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க பணிக்குழு இலக்கு கொண்டுள்ளது.
"சிங்கப்பூருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தக்கூடிய தலைசிறந்த ஆற்றல் உள்ளவர்களை நாம் இழந்து விடவில்லை என்பதை மிகவும் கவனமான முறையில் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
"அதேநேரத்தில், நம் உள்ளூர் ஊழியர்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சமநிலையைக் காண்பது சிரமமான ஒன்று. ஆனாலும் அதைச் சாதிக்க நாம் பாடுபட வேண்டும் என்றார் திரு இங்.
இந்நிலையில், மனிதவள நிபுணர்களும் இணைந்து வேலை தொடர்பான கட்டமைப்பையும்
அரசாங்கத்தின் மற்ற கொள்கை
களையும் மேலும் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த என்டியுசி விரும்புவதாக திரு இங் தெரிவித்தார்.
வேலை தொடர்பான கட்டமைப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
பாரபட்சமுள்ள வேலை நியமன அணுகுமுறைகளைக் கையாளும் நிறுவனங்களுக்கு எதிராக மேலும் கடுமையான தண்டனை விதிப்பதும் அவற்றில் அடங்கும்.
இந்த அம்சங்களை நடை
முறைப்படுத்த மனிதவள நிபுணர்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக திரு இங் கூறினார்.
முதலாளிகளுக்கும் ஊழியர்
களுக்கும் சாதகமான நிலையை ஏற்படுத்துவதே முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
ஆனால் பிஎம்இ ஊழியர்களை என்டியுசி பிரதிநிதிக்கவும் அவர் களுக்காக குரல் கொடுக்கவும் வேண்டுமென்றால் அவர்களில் மேலும் பலர் தொழிற்சங்க உறுப்பினர்களாக வேண்டும் என்றார் திரு இங்.
ஆய்வு ஒன்றில் பங்கெடுத்த 1,000 பிஎம்இ ஊழியர்களில் 88 விழுக்காட்டினர் தங்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்று வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 75 விழுக்காட்டினர் தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்கள்.