கொவிட்-19 நெருக்கடிநிலை வேலையிடச் சூழலை வெகுவாக மாற்றியிருப்பதாகவும் ஊழியர்
களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்குவதாகவும் அதிபர் ஹலிமா யாக்கோப் தமது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த வாய்ப்புகள் நிலைத்திருக்க ஊழியர் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்
களைக் கொண்டு வரும் தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் அணுகுமுறையால் பெண்களுக்குக் கூடுதல் தெரிவுகள் இருப்பதாக அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
வேலைக்குச் செல்வதா அல்லது வீட்டில் இருந்து பிள்ளை
களைப் பார்த்துக்கொள்வதா என்ற குழப்பம் அவர்களுக்கு இனி இருக்காது என்றார் அவர்.
"மற்ற ஊழியர்களைவிட வித்தியாசமாக இருப்பதாக உடற்
குறையுள்ள ஊழியர்களும் இனி கவலைப்படத் தேவையில்லை," என்று அதிபர் கூறினார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் கடந்த ஆண்டு மே தினத்தை வழக்கமான முறையில் அனுசரிக்க முடியாமல் போனதை
அதிபர் நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் சுமுகமாக நடப்பதாகவும் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக வீழ்ச்சியைக் கண்ட பிறகு, இவ்வாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளியல் வளர்ச்சி கண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையிலும் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிநடை போட மனந்தளராது அயராத உழைத்த சிங்கப்பூரர்
களுக்கு அதிபர் ஹலிமா தமது மனமார்ந்த நன்றியைத் தெரி
வித்துக்கொண்டார்.

