போலிசின் நெருக்கடிநிலை நடவடிக்கை பாவனைப் பயிற்சி

போலிசின் நெருக்கடிநிலை நடவடிக்கை பாவனைப் பயிற்சி

1 mins read
f4eb66ae-a17e-4c2a-8a9d-a73a829f947b
-

நெருக்கடிமிக்க நேரங்களில் நடத்தப்படும் அதிரடி நடவடிக்கைகளின் பாவனைப் பயிற்சியில் சிங்கப்பூர் போலிஸ் படையின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஈடுபட்டனர்.

இந்தப் பாவனைப் பயிற்சி உள்துறை அமைச்சின்கீழ் செயல்படும் பிரிவுகளுக்கான உத்திகள் மையத்தில் நடைபெற்றது.

நெருக்கடிமிக்க சூழ்நிலைகளில் மின்னல் வேகத்தில் கதவை உடைத்து உள்ளே சென்று நிலைமையை சரிசெய்யும் முறையை அதிகாரிகள் செய்து காட்டினர்.

உயிரைக் காப்பாற்ற இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று மத்திய போலிஸ் பிரிவின் உதவி ஆணையர் கிரெகரி டான் சியூ ஹின் தெரிவித்தார்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்