தாய்லாந்தின் 'பிரோம்ப்ட்பே'யுடன் இணைந்த 'பேநவ்'

தாய்லாந்தின் 'பிரோம்ப்ட்பே'யுடன் இணைந்த 'பேநவ்'

1 mins read
74244418-360c-4491-aced-e7062842afb8
-

பேநவ் தளத்­தைப் பயன்­ப­டுத்தி ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரின் வங்­கிக் கணக்­குக்கு பணம் அனுப்­ப­லாம். தாய்­லாந்­தில் இந்­தச் சேவையை பிரோம்ப்ட்பே வழங்­கு­கிறது.

இரு சேவை­களும் தற்­போது ஒன்­றி­ணைந்­துள்­ள­தாக சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் தாய்­லாந்து வங்­கி­யும் நேற்று தெரி­வித்­தன.

இரு­நா­டு­க­ளைச் சேர்ந்த இது­போன்ற தளங்­கள் ஒன்­றி­ணைந்­தி­ருப்­பது இதுவே உல­கில் முதல்­முறை என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரின் பேநவ் திட்­டத்­தில் பங்­கெ­டுக்­கும் 12 வங்­கி­களில் மூன்று வங்­கி­கள் தாய்­லாந்­தின் பிரோம்ப்­ட்பே­

யு­ட­னான கூட்டு முயற்­சி­யில் பங்­கெ­டுக்­கின்­றன.

சிங்­கப்­பூ­ரின் டிபி­எஸ் வங்கி, ஓசி­பிசி வங்கி, யுஓபி வங்கி ஆகி­யவை தாய்­லாந்­தின் பேங்­காக் வங்கி, காசி­கோர்ன் வங்கி, குருங் தாய் வங்கி, சயேம் வர்த்­தக வங்கி ஆகி­ய­வற்­று­டன் இணைந்து செயல்­ப­டு­கின்­றன.

இந்­தத் திட்­டத்­தில் மேலும் பல வங்­கி­கள் படிப்­ப­டி­யா­கச் சேர்க்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வர்த்­த­கப் பரி­வர்த்­த­னை­க­ளுக்கு வச­தி­யாக அனுப்­பப்­படும் தொகை­யின் வரம்பு

நீட்­டிக்­கப்­படும்.