குடும்பங்களின் மீள்திறன் அதிகரிக்க வேலை வாய்ப்பும் கல்வியும் அவசியம்

குடும்பங்களின் மீள்திறன் அதிகரிக்க வேலை வாய்ப்பும் கல்வியும் அவசியம்

2 mins read
773e2b24-c8f6-4345-be6e-acb0fb9f3b9b
-

எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய குடும்­பங்­க­ளுக்கு வேலை வாய்ப்பு, கல்வி ஆகி­ய­வற்றை வழங்க அர­சாங்­க­மும் சமூ­க­மும் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும் என்று நேற்று நடை­பெற்ற 'டச்' குடும்ப மாநாட்­டில் சமூக, குடும்ப மேம்­பாட்டு துணை அமைச்­சர் சுன் சூலிங் தெரி­வித்­தார்.

சீரான வரு­மா­னத்­தைத் தரும் வேலை, குழந்­தை­கள் பள்­ளிக்­குச் செல்­வது ஆகி­யவை குடும்­பங்­

க­ளுக்­குச் சீரான வாழ்க்­கை

­மு­றையை ஏற்­ப­டுத்­து­வதை மீள்­

தி­றன்­மிக்க குடும்­பங்­களை உரு­வாக்­கு­வது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லில் திரு­வாட்டி சுன் சுட்­டி­னார்.

"இது அனை­வ­ருக்­கும் தெரிந்த விஷ­ய­மா­கத் தோன்­ற­லாம். ஆனால் எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய குடும்­பங்­க­ளுக்கு வேலைக்­குச் செல்­வதும் பள்­ளிக்­குச் செல்­வ­தும் சவால்­மிக்­க­தாக இருக்­க­லாம்," என்று கல்வி துணை அமைச்­ச­ரு­மான சுன் சூலிங் கூறி­னார்.

நிகழ்ச்­சி­யின்­போது குடும்ப மீள்­தி­றன் பற்றி கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. மீள்­தி­றனை அதி­க­ரிக்க பெற்­றொ­ரின் பங்கு, குடும்­பத்தை நல்ல முறை­யில் வழி­ந­டத்­திச் செல்­வது, சவால்­மிக்க கால­கட்­டங்­களை எதிர்­கொள்ள தேவை­யான குடும்ப ஒற்­று­மை­யின் முக்­கி­யத்­து­வம் ஆகி­யவை குறித்­தும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

சவால்­மிக்க கால­கட்­டங்­க­ளைக் குடும்­பங்­கள் எதிர்­கொள்ள அவர்­க­ளி­டை­யி­லான தொடர்பு, பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்­கும் திறன்­கள் ஆகி­யவை மிக­வும் முக்­கி­யம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

"ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் பேசிக்­கொள்­ளா­த­தா­லும் தங்­கள் கருத்­து ­களை வெளிப்­ப­டை­யாகக் கூறும் பழக்­கம் இல்­லா­த­தா­லும் குடும்­பங்­களில் பிளவு ஏற்­ப­டு­வதை சமூ­கச் சேவை­யில் ஈடு­ப­டும்­போது நாங்­கள் பார்த்­தி­ருக்­கி­றோம். குடும்­பங்­களில் இத்­த­கைய சூழல்­க­ள் ஏற்­ப­டு­வதால் உற­வு­கள் முறி­கின்­றன," என்று கலந்­து­ரை­யா­டலை வழி­ந­டத்­திய 'டச்' ஒரு­கி­ணைக்­கப்­பட்ட குடும்­பங்­கள் குழு­மத்­தின் மூத்த இயக்­கு­நர் திரு­மதி அனிதா லோ-லிம் தெரி­வித்­தார்.

குடும்­பத்­தி­ன­ரின் கருத்துகளுக்­குச் செவி­சாய்ப்­பது உறவை வலுப்­

ப­டுத்­து­வ­தற்­கான முதல் படி என்­றார் திரு­வாட்டி சுன்.