தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெங்கி: விழிப்புடன் இருக்க சுற்றுப்புற வாரியம் எச்சரிக்கை

2 mins read
4a1a0fea-83a1-438d-be42-76d8c76c90de
-

சிங்­கப்­பூ­ரில் டெங்கி பிரச்­சினை கடந்­தாண்டு முற்­ப­கு­தி­யைக் காட்­டி­லும் இவ்­வாண்டு முற்­ப­கு­தி­யில் தணிந்­ததுபோல் இருந்­தா­லும், டெங்கி சம்­ப­வங்­கள் அதி­க­மா­வ­தைத் தடுக்க விழிப்­பு­டன் இருக்­கும்­படி தேசிய சுற்­றுப்­புற வாரியம் பொது­மக்­க­ளைக் கேட்­டுக்கொண்­டி­ருக்­கிறது.

கொசுக்­கள் முட்­டை­யி­டும் இடங்­களை ஒழித்து, தொடர்ந்து விழிப்­பு­டன் இருப்­பதை ஊக்­கு­விக்­கும் தேசிய டெங்கி தடுப்பு இயக்­கத்தை ஆணை­யம் நேற்று தொடங்­கி­யது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்­டின் முதல் பாதி­யில் சுமார் 10,000 டெங்கி தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதிவு செய்­யப்­பட்­டன. ஆனால் இவ்­வாண்டு இது­வரை இரண்­டா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட டெங்கி சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ளன.

வரும் மாதங்­களில் வெப்பநிலை அதிகமாகும்போது, டெங்கிச் சம்­ப­வங்­கள் அதி­க­மா­கும் என்று வாரியம் எதிர்பார்க்கிறது.

ஜூன் முதல் அக்­டோ­பர் வரை­யி­லான மாதங்­கள் வெப்பமானவை. அப்­போது ஏடீஸ் கொசுக்­கள் வேக­மாக வளர்­வ­தோடு, டெங்கி கிருமி கொசுக்கிடையே இன்­னும் விரை­வா­கப் பர­வும். அத­னால் இம்­மா­தங்­களில் டெங்­கித் தொற்று அதி­க­மா­கக் காணப்­படும்.

டெங்­கி கிரு­மி­யைப் பரப்­பும் வளர்ந்த ஏடீஸ் எகிப்தி கொசுக்­கள் சில வட்­டா­ரங்­களில் அதிக எண்­ணிக்­கை­யில் உள்­ளன. அத்­து­டன் சிங்­கப்­பூ­ரில் இது­வரை அதி­கம் காணப்­ப­டாத 3ஆம், 4ஆம் டெங்கி கிருமி வகை­கள் இப்­போது இங்கு அதி­கம் பரவி வரு­கின்­றன. இவற்றால் நிலைமை மோசமாகக் கூடும்.

இந்த டெங்கி கிருமி வகை­க­ளுக்கு எதி­ராக இங்­குள்­ள­வர்­க­ளுக்கு இன்­னும் நோய்த்­த­டுப்­பாற்­றல் ஏற்­ப­டா­த­தால் அதி­க­மா­னோ­ருக்கு டெங்கி தொற்­றும் சாத்­தி­யம் உள்­ளது.

இவ்வாண்டு டெங்கி தடுப்பு இயக்­கம் தொடங்கியதைக் குறிக்க நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சுக்கான துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் ஹாலந்து புக்­கிட் தீமா குழுத்­தொ­கு­தி­யின் ஹெங்­ஹுவா பிரி­வில் உள்ள சில இல்லங்களுக்குச் சென்றார்.

அண்மைய வாரங்களில் டெங்கிச் சம்பவங்கள் உயர்ந்து வருவதாக அவர் கூறினார்.