நூலக முன்னாள் மேலாளருக்கு நான்கு ஆண்டுகள் சிறை

நூலக முன்னாள் மேலாளருக்கு நான்கு ஆண்டுகள் சிறை

1 mins read
02c1ec42-f302-4066-98fd-b851226727f1
ஐவன் கோ சியோங் (இடம்), லோ போக் வோய்ன். கோப்புப் படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

தேசிய நூலக வாரியப் பிரிவின் முன்னாள் மேலாளருக்கு ஏறக்குறைய 600,000 வெள்ளி தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 229,000 வெள்ளி அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. பொதுச் சேவையில் நடந்துள்ள ஆகப்பெரிய ஊழல் சம்பவம் இது என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. மின்னூல், இதர மின்னிலக்க வசதிகளுக்கு மாறும் நூலக வாரியத்தின் முயற்சியில் ஐவன் கோ சியோங் வீ, 51, ஈடுபட்டிருந்தார். அவரது நண்பரான நிறுவனத்தின் நிர்வாகியான லோ போக் வோயன், 53, நூலக வாரியத்தின் வர்த்தக வாய்ப்புகளை பெறுவதற்காக அவருக்கு லஞ்சம் வழங்கியுள்ளார். இவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இரு சிங்கப்பூரர்களும் 2005க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தக் குற்றச்செயல்களை புரிந்துள்ளனர்.