பணிப்பெண் பட்டினிக்கொலை: ஆயுள் தண்டனையை குறைக்க போலிஸ்காரர் மனைவி முயற்சி

பணிப்பெண் பட்டினிக்கொலை: ஆயுள் தண்டனையை குறைக்க போலிஸ்காரர் மனைவி முயற்சி

2 mins read
353d9eb4-aa39-47d5-bc29-3192108e7a50
24 வயது மியன்மார் பணிப்பெண் பியாங் ஙெ டான் (வலம்) பட்டினிபோட்டு துன்புறுத்திய குற்றச்சாட்டுகளை காயத்திரி முருகையன் ஒப்புக் கொண்டுள்ளார். படங்கள்: ஹெல்பிங் ஹாண்ட்ஸ் ஃபார் மைக்ரண்ட் வொர்க்கர்ஸ், லியான்ஹ வான்பாவ் -
multi-img1 of 2

மியன்­மார் பணிப்­பெண் பட்டினி போட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் முன்­னாள் காவல்­துறை அதி­கா­ரி­யின் மனைவி, ஆயுள் தண்­ட­னை­யி­லி­ருந்து தப்­பிக்க புதிய வழக்­க­றி­ஞரை நிய­மித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதத்­தில் தன் மீது சுமத்­தப்­பட்ட 28 குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் போலிஸ்­கா­ர­ரின் மனை­வி­யான 41 வயது காயத்திரி முரு­கை­யன் ஒப்­புக் கொண்­டார். அவற்­றில் நோக்­க­மற்ற மரணம் விளைவித்த குற்­றச்­சாட்டு மிக­வும் கடு­மை­யா­னது.

அதி­க­பட்­ச­மாக இதற்கு ஆயுள் தண்­டனை விதிக்க வேண்­டும் என்று அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

மற்­றவை பணிப்­பெண்ணை காயப்­ப­டுத்­தி­யது தொடர்­பான குற்­றச்­சாட்­டு­கள்.

2016 ஜூலை 26ஆம் தேதி கடை­சி­யாக தாக்­கப்­பட்­ட­போது 24 வயது பணிப்­பெண் பியாங் ஙெ டான் உயி­ரி­ழந்­தார்.

அப்­போது அவ­ரது உடல் எடை 24 கிலோ மட்­டுமே இருந்­தது.

உயர்நீதி­மன்ற நீதி­பதி சீ கீ ஊன் நேற்று காயத்தி­ரிக்கு தண்­டனை விதிக்­க­வி­ருந்­தார். ஆனால் வழக்கு விசா­ர­ணை­யின்­போது அவர் வழக்­க­றி­ஞரை மாற்­றிய விவ­ரம் தெரி­விக்­கப்­பட்­டது.

இதைச் சுட்­டிக்­காட்­டிய நீதி­பதி சீ, காயத்திரி குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்ட தனது நிலை­யி­லி­ருந்து மாறி­யி­ருப்­ப­து­போல் தெரி­கிறது என்­றார்.

அது குறித்து தெளி­வு­ப­டுத்­தும்­படி அவ­ரது புதிய வழக்­க­றி­ஞரான சென்­னி­டம் நீதி­பதி கூறி­னார்.

இதை­ய­டுத்து பேசிய திரு சென், நோக்­க­மற்ற கொலைக் குற்­றச்­சாட்டை அரசு தரப்­பி­னர் குறைக்கும்படி பரி­சீ­லிக்க தனது கட்­சிக் ­கா­ரர் கருணை மனுவைத் தாக்­கல் செய்ய விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

முன்பு வழக்கு விசா­ர­ணை­யின்­போது காயத்திரி கர்ப்­பி­ணி­யாக இருந்­த­தால் கடு­மை­யான மன அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால் அவர் மீதான கொலைக் குற்­றச்­சாட்டு குறைக்­கப்­பட்டு நோக்­க­மற்ற மரணம் விளைவித்த குற்­றச்­சாட்­டாக மாற்­றப்­பட்­டது.

தனது கட்சிக்காரர் முன்பு ஒப்புக் கொண்டதை மீட்டுக்கொள்ள விரும்பவில்லை என்று குறிப்பிட்ட வழக்கறிஞர் சென், தண்டனையைக் குறைக்கும் மனுவை மட்டும் தாக்கல் செய்ய அவகாசம் ேகட்டுள்ளார் என்றார்.

இதையடுத்து வழக்கு மே 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.