'சிங்கப்பூர்-ஐரோப்பா இயற்கையான பங்காளிகள்'

'சிங்கப்பூர்-ஐரோப்பா இயற்கையான பங்காளிகள்'

2 mins read
80508a57-4233-4504-99b7-8d06cbecb144
-

சிங்­கப்­பூ­ருக்கு ஐரோப்பா மூன்று வழி­களில் இயற்­கை­யான பங்­கா­ளி­யாக இருக்க முடி­யும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் கூறி­யுள்­ளார்.

வர்த்­த­கங்­கள் நன்கு ஊன்­று­வ­தற்­குத் தேவை­யான பாது­காப்­பான, நம்­ப­க­மான சுற்­றுச்­சூ­ழலை வழங்­கு­வது அவற்­றில் ஒன்று.

மின்­னி­லக்­கம் மூலம் மக்­கள், வர்த்­த­கங்­கள், யோச­னை­களை இணைப்­பது இரண்டாவது வழி, பசு­மை­யான பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு நிலைத் தன்­மையை நோக்கி செயல்­ப­டு­வது மூன்றாவது வழி.

சிங்­கப்­பூ­ரில் ஆர்ச்­சர்ட் ரோட்­டில் உள்ள கிராண்ட் ஹையட் ஹோட்­ட­லில் நடை­பெற்ற ஐரோப்­பிய வர்த்­தக தொழில்­ச­பை­யின் ஆண்டு பொதுக்­கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

பாது­காப்­பான, நம்­ப­க­மான சூழலை வழங்­கு­வது குறித்து விளக்­கிய திரு சான், முத­லீட்டு வாய்ப்­பு­களைப் பரி­சீ­லிக்­கும்­போது பெரும்­பா­லான நிறு­வ­னங்­க­ளுக்கு புவியியல் அர­சி­யல் முன்­னணி வகிக்­கிறது.

எல்­லை தாண்­டிய விநி­யோ­கச் சங்­கிலி ஒரு ெபரிய மறு­சீ­ர­மைப்பை எதிர்­நோக்கு­கிறது.

நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய நிலையை எப்­படி சீர­மைத்­துக் கொள்­ள­லாம் என்று யோசிக்­கும் வேளை­யில் அமைவிடம் ஒரு கேள்­வி­யாக இருக்­காது.

ஆனால் நம்­பிக்­கை­யும் மதிப்­பும் முக்­கி­யம்.

அந்த வகை­யில் சிங்­கப்­பூர் அதன் நம்­ப­க­மான வர்த்­த­கங்­க­ளால் ஓர் அனைத்­து­லக வர்த்­தக மைய­மாக நிலை­நி­றுத்­திக் கொண்­டுள்­ள­தாக திரு சான் கூறி­னார்.

மின்­னி­லக்­க­ம­ய­மும் மின்­னி­லக்க வர்த்­த­க­மும் முத­லீடு, மேம்­பாட்­டுக்கு குறிப்­பி­டத்­தக்க வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்­ளன.

அதற்கு கூகல், தெமாசெக், பைன் ஆகியவற்றின் அண்மைய ஆய்வுகளை அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த ஆய்வுகளில் 2025ஆம் ஆண்டில் தென்கிழக்கு ஆசியாவின் மின்னிலக்கப் பொருளியல் 100 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 300 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் மும்மடங்கு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரும் இந்த வளர்ச்சியில் பங்கேற்று வருகிறது. நீண்டகால அடிப்படையில் பருவநிலை மாற்றமும் வாய்ப்புகளை உருவாக்கும்.

குறிப்பாக, பசுமை பொருளியல் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவுடன் நெருக்கமாகச் செயல்பட சிங்கப்பூர் ஆர்வமாக உள்ளது. ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் பங்காளியாகவும் இருக்க சிங்கப்பூர் ஆர்வமுடன் இருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சர் சான் மேலும் தெரி வித்தார்.