கொவிட்-19 தடுப்பூசியால் நிறுவனங்களுக்கு உற்சாகம்

கொவிட்-19 தடுப்பூசியால் நிறுவனங்களுக்கு உற்சாகம்

2 mins read
ba7a677b-f27e-4987-a079-3e3d97f18f78
-

வர்த்தக எதிர்பார்ப்புகள் குறித்து முதலாம் காலாண்டு ஆய்வுகள்

தற்­போது நடை­மு­றை­யில் உள்ள கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டத்­தால் ஏற்­ப­ட­வுள்ள வர்த்­தக வாய்ப்­பு­கள் குறித்து சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் உற்­சா­கம் தெரி­வித்­துள்­ளன. பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் (இடிபி), புள்­ளி­வி­வ­ரத் துறை (சிங்ஸ்­டேட்) இரண்­டும் இவ்­வாண்­டின் முதலாம் காலாண்­டுக்­கான இரு வேறு ஆய்வு அறிக்­கை­களை வெளி­யிட்­ட­தில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

குறிப்­பாக, உற்­பத்தி மற்­றும் சேவைப் பிரி­வு­களில் உள்ள நிறு­வனங்­கள் தங்­க­ளின் வர்த்­தக எதிர்­பார்ப்­பு­கள் மீது கொண்­டுள்ள நம்­பிக்கை கூடி­யுள்­ளது.

அடுத்த ஆறு மாதங்­களில் வர்த்­தக நில­வ­ரம் மேம்­படும் என்று 41% உற்­பத்­தி­யா­ளர்­கள் தெரி­வித்­தி­ருந்­தனர். இருப்­பி­னும் வர்த்­த­கம் வலு­வற்ற நிலை­யில் இருக்­கும் என்று 3% கூறி­யி­ருந்­த­தாக இடிபி ஆய்வு தெரி­வித்­தது.

தங்­க­ளுக்­குச் சாத­க­மான வர்த்­தக நில­வ­ரம் ஏப்­ரல் மாதத்­திற்­கும் செப்­டம்­பர் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் ஏற்­படும் என்று 38% உற்­பத்தி நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தி­ருந்­தன. முந்­தைய காலாண்­டில் இது 32 விழுக்­கா­டாக இருந்­தது.

நம்­பிக்கை தரும் வர்த்­தக நில­வரம் ஏற்­படும் என்று மின்­ன­ணு­வி­யல் துறை நிறு­வ­னங்­களே அதிக நம்­பிக்கை தெரி­வித்­தி­ருந்­தன. 66% நிறு­வ­னங்­கள் இவ்­வாறு கூறின.

சேவைப் பிரி­வி­லும் அதே நம்­பிக்கை காணப்­பட்­டது. மேலும் சாத­க­மான ஒரு வர்த்­தக நில­வரத்தை எதிர்­பார்ப்­ப­தாக 11% சேவைப்­பி­ரிவு நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தி­ருந்­தன. முந்­தைய சிங்ஸ்­டேட் ஆய்­வில் இது 7 விழுக்­கா­டாக இருந்­தது.

அடுத்த ஆறு மாதங்­களில் வர்த்­தக நில­வ­ரம் மேம்­படும் என்று எதிர்­பார்ப்­ப­தாக சேவைப் பிரிவு சார்ந்த தக­வல்­தொ­டர்பு, நிதி மற்­றும் காப்­பு­றுதி, மொத்த விற்­பனை வர்த்­த­கத் துறை­கள் தெரி­வித்­துள்­ளன.

இதற்­கி­டையே, வலு­வற்ற வர்த்­த­கச் சூழலே ஏற்­படும் என்று ஹோட்­டல் மற்­றும் சில்­லறை வர்த்­த­கத் துறை­கள் எதிர்­பார்ப்­ப­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள், மூடல்­க­ளுக்கு இடையே தேவை குறை­யும் என்று ஹோட்­டல் துறை­யி­னர் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், தேவை குறைந்­தி­ருப்­ப­தால் வேலை­வாய்ப்பு அள­வும் குறை­யும் என்று ஹோட்­டல் துறை நிறு­வ­னங்­கள் எதிர்­பார்க்­கின்­றன.

இருப்­பி­னும், இவ்­வாண்டு முதல் காலாண்­டில் இருந்­தது போலவே இரண்­டாம் காலாண்­டி­லும் வேலை­வாய்ப்பு நிலை இருக்­கும் என்று உற்­பத்­திப் பிரி­வின் 77% நிறு­வனங்­கள் தெரி­வித்­துள்­ளன.