மார்ச் மாதத்தில் வங்கிக் கடன் 0.7% உயர்ந்தது

மார்ச் மாதத்தில் வங்கிக் கடன் 0.7% உயர்ந்தது

1 mins read
d275784a-f8dd-44e7-a8dc-bcbcdaf79755
-

வங்கிக் கடன் தொடர்ந்து மார்ச் மாதத்திலும் உயர்ந்தது. குறிப்பாக வீடமைப்புக் கடன்களுக்கு மேலும் அதிகக் கடன் தொகையை வழங்கியதன் மூலம் 0.7% அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

உள்நாட்டு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன் மதிப்பு மார்ச் மாதத்தில் $691.23 பில்லியனாக பதிவாகியுள்ளது. பிப்ரவரியில் இது $686.73 பில்லியனாக இருந்தது. பயனீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட கடனில், 75% வீடமைப்புக் கடன்களாகும். வீடமைப்புக் கடன்கள் தொடர்பில் பிப்ரவரியில் பதிவான 0.3% அதிகரிப்பைக் காட்டிலும் சற்று கூடுதலாக மார்ச் மாதத்தில் 0.6% அதிகரிப்பு பதிவாகியிருந்தது.

இருப்பினும், ஆண்டு அடிப்படையில் மொத்த வங்கிக் கடன் 0.2% குறைந்துள்ளது.