பெரும் வர்த்தகக் கட்டமைப்பு உருவாகிறது

பெரும் வர்த்தகக் கட்டமைப்பு உருவாகிறது

1 mins read
95b33644-d2e5-4cd9-b89f-611f28768b93
-

சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழில் சபை (சிக்கி), அனைத்­து­லக வர்த்­த­கக் கட்­ட­மைப்­பான 'புரோக்ஸ்­டேரா'வுடன் இணைந்து பெரும் வர்த்­த­கக் கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்­க­வுள்­ளது.

இணை­யத்­த­ளங்­களை மேலும் சிறப்­பா­கப் பயன்­ப­டுத்த அறி­வ­து­டன் புதுப்­புது வாய்ப்­பு­க­ளைக் கண்­ட­றிய சிக்கி அதன் உறுப்­பினர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் வர்த்­தக ஆவ­ணச் சேவை­களை இக்­கட்­ட­மைப்பு வழி உரு­மாற்­ற­வுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அனைத்­து­லக அள­வில் சிங்­கப்­பூர் அதன் முக்­கி­யத்­து­வத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள சிக்கி போன்ற வர்த்­தக அமைப்­பு­கள் இவ்­வாறு உத­வ­லாம் என்­றார் சிக்கி தலை­வர் டி.சந்­துரு.

நிதி இரண்­டாம் அமைச்­சர் இந்தி­ராணி ராஜா­வும் டாக்­டர் சந்­து­ரு­வும் நேற்று நடைபெற்ற கலந்­து­ரை­யா­டல் அமர்­வில் பேசிய பிறகு, சிக்கி மற்­றும் புரோக்ஸ்­டேரா இரண்டும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டன.

இந்த பங்­கா­ளித்­து­வத்­தால் மேலும் பெரி­த­ள­வி­லான வர்த்­த­கச் சூழ­லு­டன் தொழில்­மு­னை­வர்­கள் இணைந்து, கட்­ட­மைப்­பின் பலனை அடை­வார்­கள் என்­றார் டாக்­டர் சந்­துரு.