'தொழில்துறையை பலப்படுத்த வேண்டும்'

'தொழில்துறையை பலப்படுத்த வேண்டும்'

2 mins read
af0460d1-86db-41ac-9985-b3a662fde53e
தொழில்துறையை உருமாற்றும் திட்டத்தை எதிர்காலத்திற்கு தயார்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 சூழலுக்குப் பிந்­திய காலத்­தில் புதிய வாய்ப்­பு­க­ளைக் கைப்­பற்ற வேண்­டு­மெ­னில் அடுத்த ஐந்து ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரின் 23 தொழில்­துறை உரு­மாற்­றத் திட்­டத்தை புதுப்­பித்து பலப்­ப­டுத்த வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

'ஐடி­எம் 2021' எனும் அந்த திட்­டத்தை மூன்று வழி­களில் பலப்­ப­டுத்­த­லாம் என்­றார் அவர்.

வலு­வான பணிக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­களை புகுத்­து­தல், ஆய்வு மற்­றும் புத்­தாக்­கத்­து­டன் ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­தல், வேலை­மற்­றும் திறன்­களில் கூடு­தல் அக்­கறை செலுத்­து­தல் என்று அமைச்சர் ஹெங் குறிப்­பிட்­டார்.

"ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு தொழில்­துறை உரு­மாற்­றுத் திட்­டத்­தைத் தொடங்­கி­ய­தைப் போல அதனை வலுப்­ப­டுத்த வேண்­டும். எதிர்­கா­லத்­திற்கு ஊழி­யர்­க­ளை­யும் வர்த்­த­கங்­க­ளை­யும் தயார்­ப்ப­டுத்­தும் முயற்­சி­களை நாம் இரட்­டிப்­பாக்க வேண்­டும்," என்­று துணைப் பிர­த­ ம­ரும் பொரு­ளி­யல் கொள்­கை­ களுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ ச­ரு­மான திரு ஹெங் தெரி­வித்­தார்.

நேற்று நடை­பெற்ற எதிர்­கால பொரு­ளி­யல் மன்­றத்­தின் முதல் மெய்­நி­கர் கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

அந்­தக் குழு­தான் தொழில்­துறை உரு­மாற்­றுத் திட்­டத்­துக்கு தலைமை வகித்து மேற்­பார்­வை­யி­டு­கிறது.

"பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள் நெருக்­க­டியை சமா­ளிக்­க­வும் ஆற்­ற­லைக் கட்­டிக் காக்­க­வும் திற­மை­யான ஊழி­யர்­க­ளைத் தக்க வைத்துக்­கொள்­ள­வும் திறம்­பட செயல்­பட்­டுள்­ளன. நமது வலு­வான முத்­த­ரப்பு அடித்­த­ளத்­து­டன் வலு­வான நிலை­யி­லி­ருந்து எதிர்­கா­லத்தை அமைத்து வரு­கி­றோம்," என்று அவர் தெரிவித்தார்.

எதிர்­கால பொரு­ளி­யல் மன்­றத்­தின் கீழ் 2016ல் தொழில்­துறை உரு­மாற்­றுத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது. உற்பத்தித் துறை­யில் உள்ள 23 தொழில்­து­றை­க­ளுக்­குத் தேவை­யான தகுந்த சுற்­றுச்­சூ­ழல், வர்த்­த­கம், தொடர்­பு­கள், அத்­தி­யா­வ­சிய உள்­நாட்டு சேவை­கள், நவீன சேவை­கள், பாணி­கள் இதன் மூலம் வடிவமைக்கப்படுகின்றன.

இந்­தப் பொரு­ளி­யல் உரு­மாற்­றுத் திட்­டத்­தின் முயற்­சி­கள் தேசிய ஆய்வு, புத்­தாக்கம் மற்­றம் நிறு­வன திட்­டத்­து­டன் (ஆர்­ஐஇ 2025) ஒருங்­கி­ணைக்­கப்­பட வேண்­டும் என்று திரு ஹெங் மேலும் கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்­டு­களில் ஆய்வு, புத்­தாக்­கத்­திற்கு 25 பில்­லி­யன் வெள்­ளியை சிங்­கப்­பூர் முத­லீடு செய்­ய­வுள்­ளதே அதற்கு காரணம்.