மின்-ஸ்கூட்டருக்கு கட்டாயத் தேர்வு

மின்-ஸ்கூட்டருக்கு கட்டாயத் தேர்வு

2 mins read
4e587fe7-95fe-41a9-9401-d5831df669c6
மின்-ஸ்கூட்டர், மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டி ஆகிய இரண்டிற்கும் ஓட்டுநர் தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரும் ஜூன் 30ஆம் தேதி­யி­லி­ருந்து மின்-ஸ்கூட்­டர், மின்-மிதி­வண்­டிக்கு இணை­யம் வழி தேர்வு கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­கிறது.

அதற்குத் தேவை­யான கையே­டு­கள் இணை­யம் வழி­யாக வெளி­யி­டப்­படும் என்று நேற்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது. இரு வகை ஓட்டுநர் களுக்கும் மூன்று பாடங்­களை உள்­ள­டக்­கிய தேர்வு இருக்கும் என்­று ஆணை­யம் குறிப்­பிட்­டது.

நட­மா­டும் சாத­னங்­கள் பற்­றிய பொது விவ­ரங்­கள், பய­ணத்­துக்கு முந்­திய ஏற்­பாடு, சாத­னத்தை பரி­சோ­தித்­தல், மின்-ஸ்கூட்­டர், மின்- சைக்­கிள் ஆகி­ய­வற்­றுக்­கான விதி­மு­றை­கள், கோட்பாடுகள் போன்றவை தொடர்­பான கேள்­வி­கள் தேர்­வில் கேட்­கப்­படும்.

இணை­யம் வழி­யாக நடத்­தப்­படும் தேர்வு, பல பதில்­களில் சரி­யா­ன­வற்றை தேர்வு செய்­யும் வகை­யில் அமைந்­தி­ருக்­கும் என்று நேற்று வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் ஆணை­யம் தெரி­வித்­தது.

இது குறித்த விவ­ரங்­கள் பின்­னர் வெளி­யி­டப்­படும் என்­று அது கூறி­யது.

கடந்த காலங்களில் நட­மா­டும் சாத­னங்­க­ளால் விபத்­து­கள் அதி­க­ரித்­தன. மின்-ஸ்கூட்­ட­ரு­டன் மோதிய சைக்­கி­ளோட்டி ஒரு­வர் மர­ண­ம­டைந்­தார். அந்த மின்-ஸ்கூட்­டர் விதி­மு­றை­க­ளைப் பின்­பற்­ற­வில்லை என்று கூறப்படுகிறது.

இதை­ய­டுத்து நட­மா­டும் சாத­னங்­க­ளுக்­கான ஆலோ­ச­னைக் குழு, கடந்த 2019 செப்­டம்­ப­ரில் கட்­டா­யத் தேர்­வுக்கு பரிந்­துரை செய்­தது.

இந்த நிலை­யில் ஆணை­யத்­தின் தேர்வு பற்­றிய அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.

சென்ற புதன்­கி­ழமை போக்­கு ­வ­ரத்து அமைச்­சின் மூத்த நாடாளு ­மன்­றச் செய­லா­ளர் பே யாம் கெங் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் பாது­காப்­பாக வாக­னத்தை ஓட்ட தேர்வு உத­வி­யாக இருக்­கும் என்று கூறி­யி­ருந்­தார்.

"மின்-ஸ்கூட்­டர் மற்­றும் மின்­சா­ரத்­தில் இயங்­கும் மிதி­வண்டி ஓட்­டு­நர்­க­ளுக்கு விதி­மு­றை­கள், நடத்­தைக் கோட்­பா­டு­களை நன்கு அறிந்து வைத்­திருப்பதையும் மற்­ற­வர்­க­ளு­டன் பாதையை பொறுப்­பான முறை­யில் பகிர்ந்து கொள்­வ­தை­யும் தேர்வு உறு­திப்­ப­டுத்­தும்," என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மின்-ஸ்கூட்டர், மின்-மிதிவண்டி ஓட்டுநர்களுக்கு கையேடுகள் இதர மொழிகளிலும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.