ஓ.கே லிம் வந்தார்
மோசடி குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஹின் லியோங் நிறுவனர் ஓ.கே. லிம் மூன்று முறை நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் நல்ல உடல் நிலையில் இல்லை என்று நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் காரணம் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை நீதிமன்றத்துக்கு அவர் சக்கர நாற்காலியில் வந்தார். இதையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
கஞ்சா கேக் பறிமுதல்
கஞ்சா சேர்த்து தயாரிக்கப்பட்ட 87 கேக்குகள், 36 கிராம் 'ஐஸ்' ஆகியவற்றை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதன் தொடர்பில் அப்பர் கிராஸ் ஸ்திரீட் வட்டாரத் தில் 38 வயது சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்து பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

