ப. பாலசுப்பிரமணியம்
ஊழியர்களின் வாழ்க்கையில் மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் திரு சி. தமிழ் வாணன், திரு அ.மகேந்திரன் பல ஆண்டுகளுக்கு முன் ரசாயன துறைகளின் தொழிற்சங்கத்தில் (CIEU) சேர்ந்தனர்.
இச்சங்கத்தில் தற்போது சுமார் 24,000 ஊழியர்கள் இடம்பெற்று உள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளர்களின் வருடா ந்திர சம்பள பேச்சுவார்த்தை சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு ரசா யனத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து சம்பளம் தொடர்பான தகவல்களை சேகரிப்பர்.
தேசிய சம்பள மன்றம் வழிகாட்டி முறைகளை பின்பற்றியவாறு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கு தங்களுடைய நிறுவன நிர்வாகத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர். நிர்வாகத்துடன் நட்புறவை நிலைநாட்டி, இவர்கள் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு தற்போதைய வேலைச் சந்தைக்கு ஏற்ற சம்பள உயர்வையும் இதர வேலையிட சலுகைகளும் பெற உதவி செய்துள்ளனர்.
கடந்த ஆண்டில் கொவிட்-19 கிருமித்தொற்று தாக்கியபோது, அது ஒட்டுமொத்த ரசாயன துறை யை பாதித்தது, சில வேலையிடங்களில் ஆட்குறைப்பும் இடம்பெற்றது.
இத்தொழிற்சங்கத்தில் இடம்பெறுவோரில் பலர் தொழில்நுட்பர்களாக பணியாற்றுபவர்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தம் நிறுவன நிர்வாகத்துடன் கலந்துபேசி கிடைக்கும் வழக்கமான 'போனஸ்' தொகைகளை தவிர்த்து, $1,000 பெறுமானமுள்ள சிறப்பு 'போனஸ்' ஊழியர்களுக்கு கிடைக்க மூல காரணமாக விளங்கினார் ரசாயன துறைகளின் தொழில்சங்க துணை தலைவர் திரு மகேந்திரன், 59.
மற்றொரு தொழிற்சங்கவாதியான சி. தமிழ்வாணன், 58, ஊழியர்களின் ஒட்டுமொத்த நலனை நிலைநாட்டுவதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றியுள்ளார்.
பெண் தொழில்நுட்பர் ஒருவர், இரண்டு பிள்ளைகளுடன் குடும்பத் துக்கு நேரத்தை ஒதுக்க சிரமப் பட்டார்.
சுமார் ஈராண்டுகளாக நிறுவன பிரிவுகளின் தலைவர்களிடம் பேசி, அப்பெண் ஊழியர் மாறுபட்ட வேலை நேரத்திலிருந்து வழக்கமான அலுவலக நேரத்தில் பணியாற்ற கடந்தாண்டு ஏற்பாடு செய்வதில் வெற்றி கண்டார் தொழிற்சங்கத்தின் உதவி பொது செயலாளரான சி. தமிழ்வாணன்.
ஒவ்வோர் ஆண்டும் வசதி குறைந்த பின்னணியில் இருந்து வரும் தொழிற்சங்க உறுப்பினர் களுக்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய அன்பளிப்பு பொட்டலங் களை விநியோகிக்கும் திட்டத்தை வழிநடத்துகிறார் திரு மகேந்திரன்.
"ஒவ்வொரு முறையும் ஒரு ஊழியருக்கு தனிப்பட்ட முறையில் உதவி செய்து அவர்கள் நன்றி தெரிவிக்கும்போது, மனதளவில் மிகுந்த திருப்தியை தருகிறது. இச்சேவையை ஒருபோதும் சுமை யாகக் கருதவில்லை, ஆயுள்வரை சேவையாற்ற கடப்பாடு கொண்டு உள்ளேன்," என்று தெரிவித்தார் திரு சி.தமிழ்வாணன்.
ஊழியர்களின் நலனுக்காகப் போராடும் இந்த தொழிற்சங்க வாதிகளுக்கு இவ்வாண்டின் மே தின விருது நிகழ்ச்சியில் 'தொழி லாளர் தோழர்' விருது கொடுக்கப் பட்டு கெளரவிக்கப்பட்டது.
இந்த மின்னிலக்க யுகத்தில், மாற்றம் ஒன்றே மாறாதது என்றும் வேலையிடத்தில் ஊழியர்கள் பின்தங்கிவிடாமல் இருக்க தொடர்ந்து தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்தினர்.

