மறைந்தும் மறையாத தொழிற்சங்கத்தின் தோழர்கள்

மறைந்தும் மறையாத தொழிற்சங்கத்தின் தோழர்கள்

2 mins read
9e9ba35e-439d-4f42-ad5b-19737bcec31a
அமரர் திரு சி.நாச்சியப்பன் (இடம்), அமரர் திரு சி.குணசேகரன். படங்கள்: தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் -
multi-img1 of 2

கொள்­கை­பிடிப்புள்ளவர், தன்­ன­ல­மற்­ற­வர், நேர்­மை­யா­னவர்.

இப்­படி பல தொழிற்­சங்­க­வா­தி ­க­ளின் மதிப்பை பெற்­ற­வர் 40 ஆண்­டு­க­ளாக சேவை­யாற்­றிய தொழிற்­சங்­க­வாதி அம­ரர் திரு சி.நாச்­சி­யப்­பன்.

1980களில் பொதுப் பய­னீட்­டுக் கழக ஊழி­யர் சங்­கத்­தில் அவ­ரது தொழிற்­சங்­கப் பணி துவங்­கி­யது.

பொதுப் பய­னீட்­டுக் கழ­கத்­தின் எரி­சக்தி, எரி­வாயு துறை­களை நிறு­வன ரீதி­யாக மாற்­றி­ய­மைத்­த­தில் புதிய எரி­சக்தி, எரி­வாயு தொழிற்­சங்­கம் 1995ல் உரு­வா­னது.

அதன் தோற்­று­விப்பு உறுப்­பி­ன­ரான திரு நாச்­சி­யப்­பன் அச்­சங்­கப் பொது செய­லா­ள­ராக 1999 ஆம் ஆண்டிலிருந்து செயல்­பட்­டார்.

கடந்த 2001ஆம் ஆண்­டில் சங்­கத்தை ஆத­ரிக்­கும் நிறு­வ­னங்­கள் தங்­க­ளது ஒட்­டு­மொத்த பயிற்சி தொகை­யி­லி­ருந்து 20% தொழிற்­சங்­கம் ஆத­ர­வில் நடக்­கும் பயிற்சி­ க­ளுக்கு ஒதுக்க காரணமாக இருந்த இவர், இதனால் நூற்­றுக்­க­ணக்­கான ஊழி­யர்­கள் பயன்­பெற்­ற­னர்.

எரி­சக்தி துறை­யில் சிங்­கப்­பூர் தொழி­லா­ளர் திறன் தகு­தி (WSQ) கட்­ட­மைப்பு 2010ஆம் ஆண்­டில் அறி­மு­க­மா­வ­தற்கு துறை சார்ந்த பங்­கா­ளி­கள், எரி­சக்­தி சந்தை ஆணை­யம், சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி ஆகி­ய­வற்­றோடு அணுக்­க­மாக செயல்­பட்டு சாத்­தி­ய­மாக்­கி­னார்.

நிறு­வன நிர்­வா­கங்­க­ளு­டன் பேச்சுவார்த்தை நடத்­தும்­போது, குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் தொழிற்­சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு கூடு­தல் சம்­ப­ளம் பெறு­வ­தற்கு வழி­ வ­குத்­தார்.

2015ஆம் ஆண்டு முதல் தொழிற்­சங்­கத்­தின் கெள­ரவ பொது செய­லா­ள­ராக பொறுப்பு வகித்த திரு நாச்­சி­யப்­பன் 67 வய­தில் கடந்த மார்ச் மாதம் கால­மா­னார்.

இவ­ரைப் போன்று 1978ல் தமது தொழிற்­சங்க சேவையைத் தொடங்கி பல்­லாண்டு கால­மாக தொழி­லா­ளர்­க­ளுக்­காக குரல் கொடுத்­த­வர் அம­ரர் திரு சி.குண­சே­க­ரன். சிங்­கப்­பூர் விமான நிலைய முனை­யச் சேவை­ தொழிற்­சங்­கத்­தின் பொதுச் செய­லா­ள­ராக ஊழி­யர்­க­ளின் நல்­வாழ்­வுக்கு பெரும் பங்­க­ளித்­துள்­ளார்.

60 மற்­றும் 62 வய­து­களில் சம்­பளக் குறைப்பை அகற்­ற­வும் 2011ஆம் ஆண்­டில் மறு­வேலை வாய்ப்பு முறையை அறி­மு­கம் செய்­வ­தி­லும் இவர் பெரும் பங்கு ஆற்­றி­னார்.

மூத்த ஊழி­யர்­க­ளின் பங்­க­ளிப்­புக்கு அங்­கீ­கா­ரம் கிடைக்க வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருந்த அவர், சேட்ஸ்(SATS) நிறு­வ­னத்­தில் மீண்­டும் வேலைக்கு அமர்த்­தப்­பட்ட ஊழி­யர்­கள் தொடர்ந்து சம்­பள உயர்­வை­யும் ஊக்­கத்­தொ­கை­க­ளை­யும் மற்ற ஊழி­யர்­கள் போல அனு­ப­விப்­ப­தற்கு முக்­கிய கார­ண­மாக விளங்­கி­னார்.

சாங்கி விமான நிலை­யத்­தில் பணி­யாற்­றும் முன்­னிலை அல்­லாத ஊழி­யர்­க­ளுக்கு நட­மா­டும் உணவு கடை (mobile food kiosk) அறி­மு­கம் செய்­வ­தற்கு ஆத­ரவு வழங்­கி­னார்.

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­சின் வேலை­யிட பாது­காப்பு சுகா­தாரக் குழு, தொழில்­துறை உற­வு­முறை குழு (சேவை துறை), அனைத்­து­லக உற­வு­முறை குழு என பல குழுக்­களில் சேவை­யாற்றி தொழி­லா­ளர் இயக்­கத்­திற்­கும் முத்­த­ரப்பு முயற்­சி­களும் அய­ராது தோள் கொடுத்­தார். 2016ஆம் ஆண்டு வரை­ சிங்­கப்­பூர் விமான நிலைய முனை­யச் சேவை­க­ளின் தொழிற்­சங்­கத்­தில் பங்­காற்­றி­ய­வ­ரின் பங்­க­ளிப்பு என்றென்றும் மறக்­க முடியாதது.

அதனை நினை­வு­கூ­ரும் வகை­யில் இவ்­வாண்­டின் மே தின விருது­ களில், தொழி­லா­ளர் தோழர் (நட்சத்திரம்) (பார்) விருது அம­ரர் திரு நாச்­சி­யப்­ப­னுக்­கும் தொழி­லா­ளர் தோழர் (நட்சத்திரம்) விருது அம­ரர் திரு குண­சே­க­ர­னும் வழங்­கப்­பட்­டது.