மருத்துவமனை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

கூ டெக் புவாட் மருத்­து­வ­மனை அதன் ஊழி­யர்­கள் ஐந்து பேர் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கிறது.

அதன் ஆய்­வுக்­கூ­டத்­தின் பரி­சோ­தனை முடி­வு­களில் ஏற்­பட்ட தவ­றால் மார்­ப­கப் புற்­று­நோ­யா­ளி­கள் சில­ருக்கு தேவை­யில்­லாத சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. அதன் தொடர்­பில் ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

தவ­றால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளி­டம் மருத்­து­வ­மனை நேற்று மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டது. மேலும், அவர்­க­ளுக்கு நஷ்ட ஈடு கொடுக்­கப்­போ­வ­தா­க­வும் அது கூறி­யது.

ஒவ்­வொரு நோயா­ளிக்­கும் ஏற்ற நஷ்ட ஈட்­டுத் தொகை வழங்­கப்­படும் என்­றும் அத­னைச் செய்­வ­தற்கு சில காலம் பிடிக்­கும் என்­றும் கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­துவ மன்­றத் தலை­வர் இணைப் பேரா­சி­ரி­யர் பெக் வீ யாங் கூறி­னார். தேவைப்பட்டால் பாதிக்கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மன­நல ஆலோ­சனை வழங்­கப்­ப­படும் என்­றார் அவர்.

ஒழுங்கு நட­வ­டிக்­கைக்கு உள்­ளா­ன­வர்­களில் நிர்­வா­கப் பணி­யில் உள்­ள­வர்­களும் அடங்­கு­வர். கடு­மை­யான எச்­ச­ரிக்கை, அப­ரா­தம், பணி நீக்­கம் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டன.

அவர்­க­ளுக்கு ஆலோ­சனை, மறு­ப­யிற்சி, கல்வி ஆகி­ய­வை­யும் அளிக்­கப்­பட்­டன.

ஆய்­வுக்­கூட பரி­சோ­த­னை­களில் புற்­று­நோய்க் கட்­டி­யின் திசுக்­க­ளுக்கு மையி­டு­வ­தில் ஏற்­பட்ட மனி­தத் தவ­றால் சில­ருக்கு கடு­மை­யான ஹெர்2 (HER2) வகை மார்­ப­கப் புற்­று­நோய் இருப்­ப­தாக தவ­றா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது. அத­னால் அவர்­க­ளுக்­குத் தேவை­யில்­லாத சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

ஆய்வுக்கூட ஊழியர்கள் முறையான தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை முறையாக நடத்தவில்லை என்று விசாரணையில் கண்டறிந்ததாகவும் மருத்துவமனை சொன்னது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!