தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிடோக்கில் மூத்த சைக்கிளோட்டி உயிரிழப்பு: மின்-ஸ்கூட்டரோட்டி குற்றத்தை ஒப்புக்கொண்டார்

1 mins read
671dc54a-c98d-4feb-b33f-5b3cf74eb783
-

பிடோக் பகு­தி­யில் 2019ஆம் ஆண்டு நடந்த மின்-ஸ்கூட்­டர் விபத்து ஒன்­றில், 64 வயது திரு­வாட்டி ஓங் பீ எங் உயி­ரி­ழந்­தார். அவ­ரது இறப்­புக்­குக் கார­ண­மானது உட்­பட மின்-ஸ்கூட்­டர் ஓட்­டி­யான மலே­சி­யர் ஹங் கீ பூன், 22, மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

இதை­ய­டுத்து, சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான ஹங், நேற்று குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­டார்.

ஹங் ஓட்­டிச் சென்ற மின்-ஸ்கூட்­டர், விதி­மு­றைக்கு உட்­படாத ஒரு தனி­ந­பர் நட­மாட்­டச் சாத­னம் என்­றும் கூறப்­பட்­டது.

தள­வா­டப் பொட்­ட­ல­ம­டிப்பு உதவி­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த திரு­வாட்டி ஓங், புளோக் 539 பிடோக் நார்த் ஸ்தி­ரீட் 3ல் அமைந்­துள்ள மிதி­வண்­டிப் பாதை­யில் தனது மிதி­வண்­டியை ஓட்­டிச்­சென்­ற­போது ஹங் தனது மின்-ஸ்கூட்­ட­ரைக் கொண்டு அவர் மீது மோதி­னார்.

ஹங் மோதி­யதை அடுத்து, திரு­வாட்டி ஓங் தரை மீது தூக்கி­ எ­றிப்­பட்­டார். வழிப்­போக்­கர்­கள் உத­வச் சென்­ற­போதே மூதாட்டி சுய­நி­னை­வற்று, தலை­யி­லி­ருந்து ரத்­தம் கசிந்­த­வாறு காணப்­பட்­டார். ஹங், திரு­வாட்டி ஓங் இரு­வ­ரும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்.

படுகாயமடைந்த திரு­வாட்டி ஓங், கோமா நிலைக்­குப் போய்­விட்­டார். நான்கு நாட்­கள் கழித்து அவர் உயிர் பிரிந்­தது. இளை­யருக்கு இம்­மா­தம் 20ஆம் தேதி­யன்று தண்­டனை விதிக்­கப்­படும்.