மானபங்கம்: மீண்டும் சிறுவனைக் குறிவைத்த 74 வயது ஆடவருக்கு 21 மாதச் சிறைத் தண்டனை

1 mins read
1babe338-27bc-40fe-b04c-0ea3e95136a2
-

முன்­ன­தாக 11 வயது சிறு­வனை மான­பங்­கம் செய்­த­தன் தொடர்­பில் 2013ல் சிறைக்­குச் சென்ற டொக் சொன் செ, அதி­லி­ருந்து பாடம் கற்­றுக்­கொள்­ள­வில்லை. மார்ச் 2019ல் கிழக்­குப் பகு­தி­யில் உள்ள கூட்­டு­ரிமை குடி­யி­ருப்பு ஒன்­றில் தோட்ட வேலை பார்த்து வந்த 74 வயது டொக், ஏழு வயது சிறு­வனை இம்­முறை குறி­வைத்­தார்.

குற்­றம் நடந்த சம­யத்­தில் சிறு­வன் தன் தந்­தை­யு­டன் அக்­கூட்­டு­ரிமை குடி­யி­ருப்­பில் வசித்து வந்­தார் என்று கூறப்­ப­டு­கிறது.

சிறு­வ­னைத் தன் மடி­யில் உட்­கார வைத்து டொக் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது திடீ­ரென்று சிறு­வனின் உதட்­டில் முத்­தம் கொடுத்­த­தா­கக் கூறப்­பட்­டது.

சிறு­வ­னின் அண்­டை­வீட்­டார் ஒரு­வர் அவ்­வ­ழி­யா­கச் சென்­ற­போது நடந்­த­தைப் பார்த்­து­விட்­டார்.

பின்­னர், மீண்­டும் அவர்­கள் இருந்த இடத்­திற்கு அந்த அண்டை­வீட்­டுக்­கா­ரர் சென்று பார்த்­த­போது, சிறு­வ­னும் முதி­ய­வ­ரும் பாலி­யல் செய­லில் ஈடு­பட்­டி­ருந்­த­தைக் கண்­டார்.

நடந்ததைப் பற்றி புகார் அளிக்­க­வேண்­டாம் என்று டொக் கெஞ்­சி­ய­தைப் பொருட்­ப­டுத்­தா­மல் அந்த 45 வயது பெண்­மணி, பாது­கா­வல் மேற்­பார்­வை­யா­ள­ரி­டம் தெரி­வித்­தார்.

சிறு­வனை மான­பங்­கம் செய்த குற்­றத்தை டொக் ஒப்­புக்­கொண்­டதை அடுத்து நேற்று முதி­ய­வருக்கு ஓராண்டு, ஒன்­பது மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்டது.