மகனைத் துன்புறுத்திய அம்மாவுக்கு சிறை

மகனைத் துன்புறுத்திய அம்மாவுக்கு சிறை

2 mins read
115deff9-6518-4d44-b5f3-0e8f630a20f8
-

மக­னைத் துன்­பு­றுத்­திய பெண்­ணுக்கு ஐந்து ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பெண் சிறு­மி­யாக இருந்­த­போது அவ­ரது சகோ­த­ரர் அவ­ரைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­த­த­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார். அப்­போது அந்­தச் சகோ­த­ர­ருக்கு 13 வயது. சிறு­வர் இல்­லத்­தில் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு இருக்க வேண்­டும் என அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தமது தந்­தை­யும் தம்­மைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­ய­தாக அப்­பெண் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தார். ஆனால் அது நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், அப்­பெண்­ணைப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்த சகோ­த­ரர் 2018ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

இது அப்­பெண்­ணுக்­குக் கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யது. தமக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­திய சகோ­த­ரர் மகிழ்ச்­சி­யாக இருக்­கக்­கூ­டாது என்ற முடி­வுக்கு வந்­தார். தமது மூன்று பிள்­ளை­கள், தாயார், சகோ­த­ரர் ஆகி­யோ­ரைக் கொன்று தமது உயி­ரை­யும் மாய்த்­துக்­கொள்ள அவர் 2019ஆம் ஆண்­டில் திட்­ட­மிட்­டி­ருந்­தார்.

அனை­வ­ரை­யும் உயி­ரு­டன் தீயிட்டு எரிக்க அப்­பெண் திட்­ட­மிட்­டார். ஆனால் செல்ல மகன் வலி­யால் துடித்து இறப்­பதை அவர் விரும்­ப­வில்லை. ஆனால் அந்­தச் சிறு­வ­னுக்கு அப்­பெண்­ணின் சகோ­த­ர­ரின் சாயல் இருந்­த­தால் சிறு­வன் மீது அவ­ருக்கு வெறுப்பு ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, 2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­துக்­கும் ஜூலை மாதம் 15ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் குறைந்­தது 13 முறை அந்­தச் சிறு­வ­னுக்கு இன்­சு­லின் ஊசியை அப்­பெண் போட்­டார்.

அள­வுக்கு அதி­க­மான இன்­சு­லினை உட­லுக்­குள் செலுத்­தி­னால் ரத்­தத்­தில் உள்ள சர்க்­கரை அளவு வெகு­வா­கக் குறைந்து மர­ணம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று அப்­பெண்­ணுக்­குத் தெரி­ய­வந்­த­தும் அவர் அவ்­வாறு செய்­தார்.

2019ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தில் ஜோகூர் பாரு­வுக்­குச் சென்று அங்­குள்ள மருந்­துக்­க­டை­யில் இன்­சு­லின் ஊசி­களை அவர் வாங்­கி­னார். யூடி­யூப் காணொ­ளி­க­ளைப் பார்த்து அவற்­றைப் பயன்­ப­டுத்­தும் முறை­யைக் கற்­றுக்­கொண்­டார்.

அப்­பெண்­ணின் இச்­செ­ய­லின் கார­ண­மாக அவ­ரது மக­னின் ரத்த சர்க்­கரை அளவு குறைந்­தது. அவ­ருக்­குத் தலை­வலி ஏற்­பட்­டது. ஆனால் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அவர் உயிர் தப்­பி­னார்.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் தேதி­யன்று அச்­சி­று­வன் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். மொத்­தம் மூன்று முறை அவர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். ஒரு­முறை மிகக் குறை­வான ரத்த சர்க்­கரை அள­வின் கார­ண­மாக அவ­ருக்கு வலிப்பு ஏற்­பட்­ட­தால் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார்.

பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னின் அடை­யா­ளத்­தைக் காக்க குற்­றம் புரிந்த பெண்­ணின் பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.