சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களம், நாளை 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இணையம் வழி நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மலேசிய தமிழ் வானொலி இலக்கிய நிகழ்ச்சித் தயாரிப்பாளர், எழுத்தாளர், இயல் பதிப்பகத்தின் தோற்றுநர் திருமதி பொன் கோகிலம், 'வெண்பலகை எழுத்தாளர்கள்' என்ற தலைப்பில், சிறப்புரை ஆற்றுகிறார்.
சிறுகதை இலக்கியத்தை மையமாகக் கொண்ட கதைக்களம் நிகழ்ச்சியில் போட்டிக் கதைகளின் கூறுகளைப் பற்றி கலந்துரையாடலாம்.
'ஸூம்' செயலி வழி நடைபெறும் கதைக்களத்தில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண் டும் என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் கேட்டுக்கொள்கிறது.
ZOOM Link: http://singaporetamilwriters.com/kathaikalamzoom/
ZOOM Meeting ID: 853 0120 6016
கதைக்களம் நிகழ்ச்சி 9ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், 2021 மே மாதம் முதல், புதிய அங்கமாக நூல் அறிமுகப் போட்டியைக் கதைக்களம் நடத்த உள்ளது.
இதற்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்திலுள்ள நூல் ஒன்றுக்கு 140 வார்த்தைகளுக்குள் சுவாரசியமான அறிமுகம் ஒன்றை எழுதி அனுப்ப வேண்டும். இதுவரை நடத்தப்பட்டு வந்த சிறுகதை விமர்சனப் போட்டிக்குப் பதிலாக நூலறிமுகப் போட்டி இனி நடைபெறும்.
கதைக்களத்தில் எழுத்துத் திறனை மேம்படுத்தும் வகையில், சிறுகதை எழுதும் போட்டி மூன்று பிரிவுகளாக இடம்பெற உள்ளது.
மாணவர் பிரிவில் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் பங்கேற்பார்கள்.
"குமரனை அவங்க அம்மா பதற்றத்தோட தேடுறாங்க" என்ற தொடக்க வரியில் 200 முதல் 300 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
இளையர் பிரிவில் தொடக்கக் கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்பர்.
"வேறு வழியில்லை, நடந்த உண்மைகளை அவரிடம் சொல்லத்தான் போகிறேன்" என்ற தொடக்க வரியில் 300 முதல் 400 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
பொதுப் பிரிவில் பங்கேற்போர், "வாரயிறுதி நாட்களில் என்னை வீட்டில் பார்க்க முடியாது," என்ற தொடக்க வரியில் 400 முதல் 500 வார்த்தைகளுக்குள் சிறுகதையை எழுத வேண்டும்.
மேற்கண்ட படைப்புகளைக் கணினியில் அச்சிட்டு http://singaporetamilwriters.com/kkcontest என்ற மின்னியல் படிவத்தின் வழியாக 28/5/2021 வெள்ளிக் கிழமைக்குள் அனுப்பி வைக்கவும். வெற்றிபெறும் படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் உண்டு.
மேல்விவரங்களுக்கு: http://singaporetamilwriters.com/kathaikalam/
திருவாட்டி கிருத்திகா, செயலாளர் kiruthikavirku@gmail.com
திருவாட்டி பிரேமா மகாலிங்கம் 91696996

