தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'உலு பாண்டான் பகுதி, புக்கிட் தீமா கால்வாய் மேம்படுத்தப்படும்'

2 mins read
1bd80b44-03a2-4b50-9b96-5bb1ca23807f
வெள்ளநீர் நிரம்பியிருந்த புக்கிட் தீமா கால்வாய். படம்: ஃபேஸ்புக் -

கடும் மழையால் திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்கும் திட்டம்

உலு பாண்­டான் கால்­வாய் அரு­கி­லுள்ள பூங்கா இணைப்­பின் தாழ்­வான பகுதி ஒன்று, ஏப்­ரல் 17ஆம் தேதி­யன்று திடீர் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டது. எதிர்­கால மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளின் ஓர் அங்­க­மாக இப்­ப­கு­தியை உயர்த்­த­வுள்­ள­தாக நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் கூறி­னார்.

கடும் மழை பொழிந்­த­தில் வெள்­ளம் ஏற்­பட்ட சம்­ப­வம், இனி­யும் இது­போன்ற சம்­ப­வங்­கள் நடக்­கா­மல் இருப்­ப­தைத் தடுக்­கும் திட்­டம் குறித்து திரு கிரிஸ்­த­ஃபர் டி சூசா (ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத்­தொ­குதி) எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு திரு­வாட்டி ஃபூ இவ்­வாறு பதி­ல­ளித்­தார். கிட்­டத்­தட்ட 300 மீட்­டர் நீள­மு­டைய உலு பாண்­டான் கால்­வாய் பகு­தி­யில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்ட போதும் அதே வட்­டா­ரத்­தில் கால்­வாய் அரு­கில் அமைந்த பிர­தான சாலை­கள் ஏதும் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று குறிப்­பிட்­டார் அவர்.

அதே நாளில் புக்­கிட் தீமா, டனர்ன் சாலை­க­ளி­லும் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. ஆனால் 30 நிமி­டங்­களில் வெள்ள நீர் வடிந்­து­விட்­டது என்­றும் போக்­கு­வ­ரத்து தடை­ப­ட­வில்லை என்­றும் திரு­வாட்டி ஃபூ கூறி­னார்.

புக்­கிட் தீமா கால்­வாய் தொடர்­பில் செப்­டம்­பர் 2019ல் முடி­வ­டைந்த சில மேம்­பா­டு­க­ளால் அங்கு திடீர் வெள்­ளச் சம்­ப­வங்­கள் நிக­ழ­வில்லை என்­றார் அவர். இதை­ய­டுத்து, கடந்த மாதம் வெள்­ளம் ஏற்­பட்ட கால்­வாய் பகுதி, மேம்­ப­டுத்­தப்­படும் என்­றும் இது 2024ல் முடி­வ­டை­யும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மேம்­பாட்­டுப் பணி­கள் முடி­வ­டைந்­ததை அடுத்து, கடும் மழை பெய்­தா­லும் இக்­கு­றிப்­பிட்ட கால்­வாய் பகு­தி­யில் ஏப்­ரல் 17 அன்று பதி­வா­னதைவிட நீர்­மட்­டம் ஒரு மீட்­ட­ருக்­குக் குறை­வா­கத் தான் இருக்­கும் என்­றார் அவர்.