முடுக்கிவிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்

முடுக்கிவிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள்

3 mins read
977fc9ff-7281-4236-b62d-42fe9bf069eb
-

சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­

யி­லும் இங் டெங் ஃபோங் மருத்துவ­ம­னை­யி­லும் தலா ஓர் ஊழி­ய­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்ள நிலை­யில் இரு மருத்­து­வ­ம­னை­களும் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க தேவை­யான நட­வடிக்­கை­களை முடுக்­கி­விட்­டுள்­ளன. இந்த இரண்டு மருத்­து­வ­

ம­னை­க­ளின் ஊழி­யர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பதை சுகா­தார அமைச்சு நேற்று முன்­

தி­னம் இரவு உறுதி செய்­தது. இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னை­யில் அறுவை சிகிச்சை அறை தொழில்­நுட்­ப­ரா­கப் பணி­யாற்­றும் 42 வயது மலே­சிய ஆட­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட அவர் கடந்த ஜன­வரி மாதம் 10ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூர் திரும்­பி­னார். ஜன­வரி 24ஆம் தேதி வரை தமக்கு விதிக்­கப்­பட்ட இல்­லத் தனிமை உத்­த­ரவை அவர் நிறை­வேற்­றி­னார்.

ஜன­வரி 23ஆம் தேதி­யன்று அவ­ருக்கு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அதில் அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், கடந்த மாதம் 21ஆம் தேதி­யன்று அவ­ருக்கு இரு­மல் ஏற்­பட்­டது. ஆனால் கிட்­டத்­தட்ட மூன்று மாதங்­கள் கழித்து, இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று அவர் மருத்­துவ உதவி நாடி­னார். அதற்­குள் இரு­மல் மோச­ம­டைந்­து­விட்­டது. இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னை­யில் உள்ள ஊழி­யர்­

க­ளுக்­கான மருந்­த­கத்­தில் அவ­ருக்கு கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அதில் அவ­ருக்குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட ஆட­வர் தற்­போது இங் டெங் ஃபோங் மருத்­து­வ­

ம­னை­யில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னையை நிர்­வ­கிக்­கும் ஜூரோங் ஹெல்த் வளா­கம் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டது.

அவர் கடை­சி­யாக இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரிந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ருக்கு முன்பே கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்­றும் அவ­ரி­ட­மி­ருந்து மற்­ற­வர்­

க­ளுக்­குக் கிருமி பர­வும் அபா­யம் குறை­வாக இருக்­கக்­கூ­டும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. டான் டோக் செங் கொவிட்-19 குழு­மத்­து­டன் அவ­ருக்குத் தொடர்பு இல்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யா­கப் பாதிக்­கப்­பட்ட ஆட­வ­ரின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது. அந்த ஆட­வர் மருத்­து­வ­

ம­னை­யில் சென்ற அனைத்து இடங்­க­ளை­யும் கிருமி நாசினி திர­வத்­தைக் கொண்டு சுத்­தம் செய்து­ விட்­ட­தாக இங் டெங் ஃபோங் மருத்­து­வ­மனை கூறி­யது.

"எங்­க­ளது நோயா­ளி­கள், ஊழி­யர்­கள், நோயா­ளி­க­ளைக் காண மருத்­து­வ­ம­னைக்கு வரு­ப­வர்­கள் ஆகி­யோ­ரைப் பாது­காப்­பாக வைத்­தி­ருக்க மிகக் கடு­மை­யாக முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும். பாதிக்­கப்­பட்ட ஊழி­ய­ருக்கு எங்­கள் முழு ஆத­ரவு வழங்­கப்­படும்," என்று ஜூரோங் ஹெல்த் வளா­கம் கூறி­யது. இது ஒரு­பு­றம் இருக்க, சாங்கி பொது மருத்­து­வ­

ம­னை­யில் துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ராக பணி­பு­ரிந்த 43 வயது பெண்­ணுக்­கும் கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

சாங்கி விமான நிலை­யத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள குழு­மத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரு­டன் இப்­பெண்­மணி ஒரே வீட்­டில் வசித்­தார். பாதிக்­கப்­பட்­ட­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தால் இப்பெண் இம்­மா­தம் 8ஆம் தேதி­யன்று தனி­மைப்

­ப­டுத்­தப்­பட்­டார். மறு­நாள் அவ­ருக்கு இரு­மல் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து, தம்­மி­டம் தென்­பட்ட கொவிட்-19 அறி­கு­றி­கள் பற்றி சுகா­தார அமைச்­சி­டம் அவர் தெரி­வித்­தார்.

அத­னைத் தொடர்ந்து, அவ­ருக்­குக் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. அவ­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று உறுதி செய்­யப்­பட்­டது.

உரு­மா­றிய பி1617 வகை கிருமி­ யால் அவர் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஆரம்­ப­கட்ட மருத்­து­வப் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. மருத்­து­வ­ம­னை­யில் உள்ள நோயா­ளி­

க­ளு­டன் பாதிக்­கப்­பட்ட பெண்­ணுக்கு நேர­டித் தொடர்பு இல்லை என்று சாங்கி பொது மருத்­து­வ­மனை அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அவர் துப்­பு­ர­வுப் பணி­களில் ஈடு­பட்­ட­போது முழுப் பாது­காப்பு ஆடை அணிந்­தி­ருந்­த­தாக மருத்­து­வ­மனை தெரி­வித்­தது. பாதிக்­கப்­பட்ட பெண் இரு­முறை கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்டுக்­ கொண்­ட­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. பாதிக்­கப்­பட்­ட­வ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோரை அடை­யா­ளம் காணும் பணி­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளன.